சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை விவகாரம்:

அமைச்சர் வஜிர அபேவர்தனவைச் சந்தித்த
கல்முனை மாநகர சபையின்
சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்கள்

கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்களும், மற்றும் கொழும்பு போறம் (Colombo Forum) என்றழைக்கப்படும் சாய்ந்தமருதூரைச் சேர்ந்த கொழும்பு வாழ் பிரமுகர்களும் நேற்று 27ம் திகதி மாலை, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவை, அவரது இல்லத்தில் சந்தித்து சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையின் தேவை குறித்தும் இதிலுள்ள இழுபறிகள் குறித்தும் தெளிவாகவும் விளக்கமாகாகவும் பேசியுள்ளார்கள்.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை உருவாக்குவது சம்பந்தமாக கடந்த 26ம் திகதி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் பேச்சு வார்த்தையிலோ அல்லது சாய்ந்தமருது நகரசபை விடயத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலோ, சாய்ந்தமருதில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் மக்களின் ஆணையைப் பெற்று சாய்ந்தமருதில் இருக்கும் ஒரேயொரு அரசியல் அதிகாரம் பெற்ற ஒண்பது மாநகர சபை உறுப்பினர்களின் சார்பாக யாரும் அழைக்கப்படவோ அல்லது சேர்த்துக் கொள்ளப்படவோ இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன, சாய்ந்தமருது மக்கள் சார்பாக, அக்குழுவிற்கு பிரதிநிதி ஒருவரை உடனடியாக தெரிவுசெய்து தருமாறு அமைச்சரைச் சந்தித்த குழுவினரைக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஏகமனதான தீர்மானத்துடன் ஒருவரின் பெயரை அமைச்சருக்கு வழங்கியுள்ளார்கள்..





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top