அமெரிக்காவுக்கான புதிய தூதராக
சவூதி அரேபியா இளவரசி நியமனம்
சவூதி அரேபியா நாட்டு வரலாற்றில்
முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண்
நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
இஸ்லாமிய
நாடான சவூதி
அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த
வாகன ஓட்டும்
உரிமை சமீபத்தில்
அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள்
பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும்
நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில்,
சவூதி அரேபியா
நாட்டு வரலாற்றில்
முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண்
நியமிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
சவூதி
இளவரசிகளில் ஒருவரான ரிமா பின்ட் பன்டர்
என்பவர் அமெரிக்காவுக்கான
புதிய தூதராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர்
ஜமால் கஷோகி
கொலை தொடர்பாக
தற்போது அமெரிக்காவுக்கான
சவூதி தூதராக
பதவி வகிக்கும்
சவூதி இளவரசர்
காலித் பின்
சல்மான் இணைத்துப்
பேசப்படுவதால் இந்த புதிய நியமனத்துக்கு சவூதி
அரசு முன்வந்துள்ளதாக
கூறப்படுகிறது.
புதிய
தூதராக நியமிக்கப்பட்டுள்ள
இளவரசி ரீமாவின்
தந்தை சவூதி
அரேபியா நாட்டு
உளவுத்துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றியதுடன், அமெரிக்காவுக்கான சவூதி தூதராக 20 ஆண்டுகளுக்கும்
அதிகமாக பதவி
வகித்துள்ளார்.
இதனால்
அமெரிக்காவில் தங்கி படித்த இளவரசி ரீமா
சவூதி அரேபியாவில்
செய்துவரும் சில பொதுச்சேவைகளால் அந்நாட்டு மக்களிடையே
மிகவும் பிரபலமானவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.