சர்வராக வேலை பார்த்த
ஏழு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு
அடித்த அதிர்ஷ்டம்:
அமெரிக்காவில்
சர்வராக வேலை
பார்த்த கர்ப்பிணி
பெண்ணிற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் டிப்ஸ்
கொடுத்த சம்பவத்தை,
அவரது தந்தை
சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்காவின்
தெற்கு ஜெர்சியில்
இருக்கும் தனியார்
உணவகம் ஒன்றி
கோர்ட்னே என்ற
பெண் சர்வராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஏழு
மாத கர்ப்பிணியாக
இருந்த போதும்,
இவர் அதை
பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது
இவருடைய ஹோட்டலுக்கு
வந்த பொலிஸ்
அதிகாரிக்கு கோர்ட்னே உணவு பரிமாறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவர்
ஏன் இப்படி
வேலை செய்து
கஷ்டப்பட வேண்டும்
என்று அந்த
பொலிஸ் அதிகாரி
ஹோட்டலில் கோர்ட்னேவைப்
பற்றி விசாரித்துள்ளார்.
அப்போது
அங்கிருந்தவர்கள் இது அவருக்கு முதல் குழந்தை
எனவும், சூழ்நிலை
காரணமாக தொடர்ந்து
வேலை செய்து
வருவதாக கூறியுள்ளனர்.
இதனால்
அவருக்கு எதாவது
செய்ய வேண்டும்
என்று எண்ணிய
அந்த பொலிஸ்
அதிகாரி தனக்கு
வந்த பில்
கட்டணமான 8.75 டொலருடன் 100 டொலர்கள்(இலங்கை மதிப்பில்
18,137
ரூபாய்) டிப்ஸாக வைத்து சென்றுள்ளார்.
கோர்ட்னே
வழக்கம் போல்,
வேறு ஒரு
டேபிளில் தன்னுடைய
பணி செய்து
கொண்டிருந்தார். பொலிஸ் அதிகாரியும் சென்றுவிட்டார்.
அதன்
பின் அந்த
பெண்ணை அழைத்த
ஹோட்டல் உரிமையாளர்,
அவருக்கு 100 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளதாக கூறி,
அதனை வழங்கினார்.
இதனால் அவர்
மிகுந்த மகிழ்ச்சி
அடைந்தார். மேலும் அதிகாரி வழங்கிய குறிப்பில்
முதல் குழந்தையை
கொண்டாடுங்கள், நீங்கள் எப்போதும் மறக்க முடியாத
தருணம் என்று
குறிப்பிட்டுள்ளார்.
இதை
அறிந்த கோர்ட்னேவின்
தந்தை அதை
சமூகவலைத்தளங்களில் பதிவிட, அதைக்
கண்ட பலரும்
அவருக்கு சமூகவலைத்தளங்களில்
வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment