உலக கூட்டுறவு இளைஞர் மாநாடு
ஜூலை 22 ஆம் திகதி வரக்காப்பொலையில்
உலக
கூட்டுறவு இளைஞர்
மாநாடு எதிர்வரும்
ஜூலை மாதம்
22 ஆம் திகதி
வரக்காப்பொலையில் ஆரம்பமாகவுள்ளது.
இம்மாநாடு
தொடர்ந்து மூன்று
நாட்கள் இடம்பெறவுள்ளது.
பிரதம அதிதியாக
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க கலந்துகொள்வார். மாநாட்டில் 110 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 100 பேராளர்கள் இதில் கலந்து
கொள்ள உள்ளனர்.
ஆசிய பசுபிக்,
அமெரிக்க, ஐரோப்பிய
நாடுகளின் கூட்டு
நிறுவனகங்களுடன் இணைந்து செயற்படுபவர்களே மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர்.
சர்வதேச
கூட்டுறவு இளைஞர்
சம்மேளனத்தின் அபிவிருத்திப் பணிப்பாளர் மார்க் நோயல்,
இணைப்பதிகாரி அன்ட்ரியா தியோடரா ஆகியோர் ஏற்பாட்டு
பணிகள் குறித்து
அமைச்சர் ரிஷாட்
பதியுதீனை நேற்று
முன்தினம் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தினர்.
'இந்த சர்வதேச மாநாடு
மூலம் இலங்கையின்
கூட்டுறவுத்துறையை மேலும் வலுப்படுத்த
முடியும. என அமைச்சர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் இந்த
மாநாடு ஆர்ஜன்டினாவில்
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment