கொழும்பில் தெற்காசியாவின் அதிசயம்!!
பிரமிக்க வைக்கும் உள்ளக அழகுக் காட்சிகள்

தெற்காசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பிரமிக்க வைக்கும் உள்ளக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

1153 அடிகள் உயரம் கொண்ட தாமரை கோபுரத்தின் உட்புற பகுதிகள் நட்சத்திர ஹோட்டல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களை அரச சார்பு சமூக வலைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் திகதி தாமரை கோபுரம் திறப்படவிருந்த போதிலும் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக அந்த நடவடிக்கை தடைப்பட்டது.

இந்நிலையில் தாமரைக் கோபுரத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்த மாதம் இறுதியில் தாமரை கோபுரத்தின் திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்காசியாவில் அதிசயமிக்க கட்டடமாக தாமரை கோபுரம் அமைந்துள்ளது. இதனை நிர்மாணிக்க சீன வங்கியொன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாக வழங்கியுள்ளது.

பிரமாண்டமிக்க தாமரை கோபுரத்தில் தொலைத்தொடர்பாடல் நிலையங்கள், அருங்காட்சியகம், உணவகங்கள், அங்காடிகள், மாநாட்டு மண்டபங்கள், 400 பேர் அமரும் கேட்போர் கூடம், 1,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், ஆடம்பர விடுதிகள், வாகன தரிப்பிடம் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.












0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top