அச்சுறுத்தும் பாக் தீவிரவாதி மசூத் அசார்;
ஜெய்ஷ்-- முகமது: முக்கிய தகவல்கள்



ஜெய்ஷ் - -முகமது இயக்கமும், அதனை நிறுவிய பாகிஸ்தானின் மசூத் அசாரும் தொடர்ந்து இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். புல்வாமா தாக்குதலை நடத்தியுள்ள இந்த இயக்கத்தை பற்றிய முக்கிய தகவல்கள்:
                                         
* உலகின் மிக முக்கிய தீவிரவாதியாக இருந்து வரும் மசூத் அசாரும், அவரது ஜெய்ஷ் -- முகமது இயக்கமும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

* காஷ்மீரில் ஹர்கத்- உல் முஜாகீதின் தீவிரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் 1994-ம் ஆண்டு இந்திய அதிகாரிகளால் மசூத் அசார் கைது செய்யப்பட்டார்.

* 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காட்மண்டுவில் இருந்து இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினர். பயணிகளை விடுவிப்பதற்காக, தீவிரவாதி மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.

* அதன் பிறகு  2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெய்ஷ்- -முகமது தீவிரவாத அமைப்பை மசூத் அசார் நிறுவினார்.

* 2000-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் தாக்குதலையடுத்து, ஜெய்ஷ்--முகமது தீவிரவாதக் குழுதான் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

* 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் - - முகமது இயக்கமே.

* 2002-ம் ஆண்டில் இருந்தே ஜெய்ஷ்--முகமது தீவிரவாதக் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்தக் குழுவின் தலைவர் மெளலான மசூத் அசார் பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பஹவல்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

* அசாரை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவர் பாகிஸ்தானில் தங்கி இருக்கவில்லை என பாகிஸ்தான் மறுத்து வந்திருக்கிறது.

* கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்--முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர்.

* 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளம் மீது தாக்குதலையும் திட்டமிட்டு செய்ததது.

* 2016-ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் உரி தாக்குதலில் 20 ராணுவத்தினர் இறந்தனர்.

* 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதி, லேத்போரா துணை ராணுவ பயிற்சி மையத்தின் மீது 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 5 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

* இந்தத் தாக்குதலை நடத்தியவர்களில், பர்தீன் அகமது கான் என்ற 17 வயது இளைஞரும் ஒருவர். இவரும் கான்டிபாக் கிராமத்தைச் சேர்ந்தவர்தான்.

* கடந்த 2000-ம் ஆண்டு, ஸ்ரீநகரில் துணை ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி அகமது ஷா. மாருதி காரில் வெடிகுண்டுகளை நிரப்பி , துணை ராணுவ மையத்துக்குள் புகுந்து வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 15 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

* தற்போது, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது ஜெய்ஷ் -- முகமது இயக்கம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top