தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடலைச் சுமந்த
இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்:
வைரலாகும் வீடியோ
ஜம்முவில்
இருந்து ஸ்ரீநகருக்கு
நேற்று (வியாழக்கிழமை)
மாலை 3 மணிக்கு
புல்வாமா மாவட்டத்தில்
துணை ராணுவப்படையினர்
பேருந்தில் சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ்
இ முகமது
தீவிரவாத அமைப்பைச்
சேர்ந்த தற்கொலைப்படை
தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி
வெடிக்கச் செய்தார்.
இந்தத்
தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45
சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில்
உள்ள ராணுவ
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏராளமான வீரர்கள்
பலத்த காயமடைந்துள்ளதால்
பலி எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கக்
கூடும் என்று
அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானைச்
சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது
தீவிரவாத அமைப்பு
இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில்
சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் தீவிரவாதியால் கொல்லப்பட்டது
குறித்து அவசர
முடிவுகள் எடுக்கப்
பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் மோடி
தலைமையில் கூடியது.
அதைத்
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு
வர்த்தக ரீதியான
எந்த சலுகைகளும்
வழங்கப்படாது என்று மத்திய அமைச்சர் ஜேட்லி
தெரிவித்தார். இதனிடையே தனது பிஹார் பயணத்தை
ரத்து செய்த
உள்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங்,
காஷ்மீர் விரைந்தார்.
புல்வாமா
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
சத்ய பால்
மாலிக், வடக்கு
ராணுவத் தலைவர்
லெஃப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும்
மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத்
சிங் ஆகியோர்
அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே
புட்காம் பகுதியில்
சிஆர்பிஎப் வீரரின் உடல் அடங்கிய பெட்டியை
உள்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங்,
ஜம்மு காஷ்மீர்
டிஜிபி தில்பக்
சிங் ஆகியோர்
சுமந்து வந்தனர்.
இந்த வீடியோ
இணையத்தில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment