26.02.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்:




01. 2003ஆம் ஆண்டு இல.25 இன் கீழான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக இடைக்கால அமைச்சரவை குழுவொன்றை மறுசீரமைப்புக்காக அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 7 ஆவது விடயம்)

2003ஆம் ஆண்டு இல 25 இன் கீழான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பணிகள் தொடர்பில் கொள்கை வகுப்பி;ல் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக இடைக்கால அமைச்சரவைக் குழுவொன்றை அமைப்பதன் தேவை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய தேவைக்கு பொருத்தமான வகையில் அமைச்சரவை அமைச்சர்கள் ,அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்களாக 17 பேரைக் கொண்ட இடைக்கால அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்து அந்தக் குழு மறுசீரமைப்புக்காக டிஜிட்டல் அடிப்படை வசதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. கெட்டவலமுல்லவில் அமைந்துள்ள இலங்கை பொலிஸ் வீடமைப்பு தொகுதியை மேம்படுத்துதல் (நிகழ்ச்சிநிரலில் 12ஆவது விடயம்)
இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வீடு வசதிகளை வழங்கும் உத்தியோகபூர்வ வீடமைப்பு கட்டமைப்பு இரண்டு கொழும்பு கெட்டவலமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளன. அத்தோடு ஒரு வீடமைப்பு கட்டடத் தொகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதினால் புனரமைப்பு நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இந்த அத்தியாவசிய சீர்செய்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு தேவையான ஒழுங்குகளை செய்து கொடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பொல்பிதிகம பொலிஸ் நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)
பொல்பிதிகம பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டதுடன் பல்வேறு நடைமுறை நடவடிக்கையின் அடிப்படையில் இந்த நிர்மாணப்பணிகள் இதுரையில் தாமதமடைந்துள்ளன. இதனால் இந்த நிர்மாணப்பணிகளை பொறியியலாளர் நிர்மாணப்பணி அலுவல்கள் தொடர்பாக மத்திய ஆலோசனை செயலகத்தின் ஆலோசனையின் கீழ் முறையாக மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக இலவச விசாவை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 17ஆவது விடயம்)
வருடத்தின் ஏனைய நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக ஏப்ரல் மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் மே மாதம் தொடக்கம் ஆகஸ்ட்; மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வெசாக் மற்றும் நோன்மதி வைபவம் மற்றும் எசெல பெரஹர போன்ற பௌத்த மத வைபவங்களும் கலாசார நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனடிப்படையில் பௌத்த மதம் பிரபலமடைந்துள்ள தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் பௌத்த சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாகயிருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. இந்த நிலையைக் கவனத்தில் கொண்டு இக்காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 6 மாதக் காலப்பகுதிக்கு தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தாய்லாந்து சுற்றுலா பயணிகளைப் போன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளான பிரிட்டன் அவுஸ்திரேலியா தென்கொரியா கனடா அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதியை வழங்குவதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் பட்டத்தை வழங்கும் நிறுவனங்களுக்கு அமைவாக வழங்கப்படும் வெளிநாட்டு பட்டப் படிப்பு கற்கை நெறிகளை நடத்தும் இந்நாட்டு கல்வி நிறுவனங்களை பதிவு செய்தல் ஒழுங்குருத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு அமைவாக வழங்கப்படும் வெளிநாட்டு பட்டப்படிப்பு கற்கை நெறியை நடத்தும் கல்வி நிலையங்கள் இலங்கையில் நடத்தப்பட்டு வருவதுடன் இந்நிறுவனங்களினால் நடத்தப்படும் கற்கை நெறிகளை உள்ளுர் மாணவர்களைப் போன்று வெளிநாட்டு மாணவர்களும் கற்கின்றனர். இந்தப் பட்டப்படிப்பு கற்கை நெறிகளின் தரம் மற்றும் தன்மை பாதுகாப்புக்காக தலைமை பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் இந்த பட்டப்படிப்பு கற்கை நெறி நடத்துவதற்கு இந்த நிறுவனங்கள் தகுதியானவைகளா என்பதை அடையாளங் காணுதல் மற்றும் ஒழுங்குருத்தலும் இடம்பெறவில்லை. இதனால் சர்வதேச தரப்படுத்தலில் முதல் 500 இடங்களுக்கு உட்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்  பட்டங்களை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்த இந்த நாட்டு வெளிநாட்டு பட்டப்படிப்பு கற்கை நெறிகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குருத்துவதற்கான நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்;கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. குடிநீர் மற்றும் சுகாதார வசதிப் பிரிவு தேசிய பல்லினத் தரப்பு இணைப்புக்கு வசதிகளை செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)
குடிநீர் மற்றும் சுகாதார சேவையில் தேசிய மற்றும் உலகளாவிய இலக்கை எட்டுவதற்கு வள மற்றும் முதலீடுகளை பயனுள்ளதாக முன்னெடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முறையான இணைப்பு பொறிமுறையொன்றை அமைப்பதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு குடிநீர் மற்றும் சுகாதார வசதி பிரிவின் பல்லின தேசிய இணைப்பு வேலையை அமைப்பதற்கு நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. ஹம்பாந்தோட்டையில் மருந்து வகை தயாரிப்பு வலயமொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 24ஆவது விடயம்)
அரச ஒளடத தயாரிப்பு கூட்டுத்தாபனத்தினால் இது வரையில் பல நோய்களுக்காக மருந்து வகைகள் தயாரி;க்கப்படுவதுடன் அந்த நிறுவனங்கள் மற்றும் ஏனைய தனியார் தயாரிப்பாளர்களினால் தற்பொழுது நாட்டிற்கு தேவையான ஒளடத வகைகளில் சுமார் 2 பில்லியன் அளவிலான மருந்துகள் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அளவு இந்த சந்தையில் நிலவும் கோரிக்கையில் 12 சதவீதத்தை பூர்த்தி செய்யக்கூடியதுடன் எஞ்சிய 88 சதவீதம் மருந்து வர்த்தக சந்தை தேவையை இறக்குமதி செய்கின்றது. இதற்காக வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் செலவிடப்படுகின்றது.
தயாரிக்கப்படும் மருந்துகளுக்காக பயன்படுத்தப்படும் கலவைகளுக்காக செலவிடப்படும் தொகையில் 70 சதவீதம் செயற்பாட்டு மருந்து மூலப்பொருட்களுக்காக .(யுP) செலவிடப்படுவதுடன் இந்த செயற்பாட்டு மூலப்பொருள் தயாரிப்புக்கான இயந்திர செயற்பாட்டை இலங்கையில் அமைப்பதன் மூலம் மருந்து வகைகளுக்காக செலவிடப்படும் வெளிநாட்டு நாணயத்தை பாரிய அளவில் நாட்டில் சேமித்துக் கொள்ள முடியும். இதற்கமைவாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் செயற்பாட்டு மருந்து மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்து கலவைகள் தயாரிப்புக்காக ஒளடத வலயமொன்றை அமைப்பதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. சூரிய மின்சக்தி திட்டத்திற்கு இந்தியாவின் கடனுதவியைப் பெற்றுக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 25ஆவது விடயம்)
சூரிய மின்சக்தி அபவிருத்திக்காக இலங்கையினால் வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைவாக இந்திய அரசாங்கம் மற்;;றும் பிரான்ஸ் அரசாங்கத்தினால் ஒத்துழைப்பு வழங்கப்படும் சர்வதேச சூரிய எரிசக்தி கலப்பு அமைப்புக்கு புரிந்துணர்வை வெளிப்படுத்தவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் முதலாவது மகாநாட்டில்; இலங்கை இதில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதுடன் சர்வதேச சூரிய சக்தி கலப்பு அமைப்பின் கட்டமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு அதில் இடம்பெற்றது. இலங்கையினால் அதன் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு கைச்சாத்திடப்பட்டத்தை .... ..இலங்கையில் சூரிய மின்சக்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைய சூரிய மின்சகத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியினால் 100 மில்லியன் ரூபா கடனைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. குடியமர்வு மற்றும் குடி வரவு குடியகழ்வு சட்டவிதிகளில் திருத்தத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் விசா விநியோக நடைமுறை செயற்பாட்டுக்கான தற்பொழுது நிலவும் விசா வகைகளுக்காக அறவிடப்படும் கட்டணம் என்பவற்றில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு குடிவரவு குடியகழ்வு விதிமுறைகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கும் சுற்றுலா விசாவுக்கு பல்வேறு நாடுகளில் நிலவும் சீரற்ற விசா கட்டண முறைக்கு பதிலாக ஒற்றை கட்டண முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சந்;தர்ப்பம் கிடைக்கும் அதே போன்று விசாயின்;றி இந்த நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இதன் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக சுற்றுலா விசா காலப்பகுதியை நீடிப்பதற்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் விசா கால எல்லையை ஒன்றுக்கும் மேற்பட்ட பிரவேசிக்கும் வசதியைக் கொண்டதாக விநியோகிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 1948 ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு குடியகழ்வு சட்டத்திலான 1956 ஆம் ஆண்டு விதிகளை திருத்துவதற்கான திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. தற்பொழுது நடைமுறையிலுள்ள விசா வகைகள் மற்றும் அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 27ஆவது விடயம்)
இலங்கையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 10 வருடக் காலம் வரையில் இங்கு வசிப்பதற்கான விசா அனுமதியை வழங்குதல் இலங்கையில் 3 இலட்சம் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 5 வருடக் காலம் வரையில் வசிப்பதற்கான விசா அனுமதியை வழங்குதல் மற்றும் வெளிநாடுகளில் குடியுரிமை அனுமதியை பெற்றுக் கொண்டதினால் இலங்கை குடியுரிமையை இழந்துள்ள நபர்களுக்கு விடயதான அமைச்சரினால் நியமிக்கப்படும் கால வரையில் நிரந்தரமாக வாழ்வதற்கான விசா அனுமதியை வழங்குவதற்காக 1948ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தில் 14 (1) மற்றும் 14 (2) ஆகிய சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 14(3) என்ற புதிய சரத்தை உள்வாங்குவதற்கான திருத்த சட்டம் சட்ட தயாரிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. பிரதேச தொழில் பேட்டைகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக காணிகளை ஒதுக்கீடு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 30ஆவது விடயம்)
பிரதேச மட்டத்தில் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச தொழிற்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் பிரதேச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பேட்டைகளில் முதலீடுகளை மேற்கௌ;வதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங் காணும் பணி பிரதேச கைத்தொழில் சேவைக் குழுவின் சிபாரிசு அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைவாக இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள 25 முதலீட்டாளர்களுக்கு 35 வருட கால குத்தகையின் கீழ் ஹோமாகம, களுத்துறை ,மில்லேவ ,குருவிற்ற ,நாலந்த எல்லாவல, எம்பிலிபிட்;டிய, கலிகமுவ ,மட்டக்களப்பு திருகோணமலை ,அம்பாறை நவகம்புர ,பொலன்னறுவை லக்சஉயன, கரந்தெனிய ,உடுகாவ ,உலப்பன ,புத்தளம் ஆகிய தொழிற்பேட்டைகளில் காணிகளை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பிரதேச கைத்தொழில் சேவைக் குழுவின் சிபாரிசுக்கமைய தற்பொழுது தொழிற்பேட்டைகளின் தமது தொழிற்சாலைகளை நடத்தும் முதலீட்டாளர்களின் வர்த்தக குறியீடு திருத்தம் புதிதாக ஒன்றிணைத்தல் மற்றும் தொழிற்சாலைகளில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்டகாலம் இடம்யெர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. இலங்கையில் கரும்பு மற்றும் சீனித் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக குழுவொன்றை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 34ஆவது விடயம்)
உள்ளுர் சீனித்தேவையில் 9 சதவீதம் மாத்திரம் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படுவதுடன் 91 சதவீத தேவை இறக்குமதி செய்யப்;படுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் சீனி மற்றும் கரும்பு தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க முடியும். இந்த விடயங்களை கவனத்திற்கொண்டு கரும்பு உற்பத்தி செய்யக்கூடிய புதிய காணிகளை கண்டறிந்து கரும்பு உற்பத்தியை விரிவுபடுத்தி இலங்கையின் சீனி தயாரிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கரும்பு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட தொழிற் துறையினருக்கும் கைத்தொழிற் துறையினருக்கும் ஆகக்கூடிய வருமானத்தை பெற்றக்கொள்ளக் கூடிய வகையில் கரும்பு மற்றும் சீனி தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சின் செயலாளரின் பங்களிப்புடன் இலங்கை சீனி தொழிற்துறை குழுவொன்றை அமைப்பதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்துக்கான திருத்த சட்டமூலத்தை பாரளுமன்றத்தில் சமர்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 39ஆவது விடயம்)
தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிப்பதற்காக திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக தயாரிக்கபட்டிருந்த திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அரச நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


14. காணி ( விசேட ஒழுங்குவிதிகள்) திருத்தச் சட்டமூலம் (நிகழ்ச்சி நிரலில் 41ஆவது விடயம்)
அரசாங்கத்தினால் காணிக்காக வழங்கியுள்ள நன்கொடை ஆவணம் அல்லது சரி செய்யப்பட்ட பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு இந்த காணிகளுக்கான நிலையான உறுதி பத்திரத்தை வழங்குவதற்கு தேவையான விதி முறைகளை உள்ளடக்கிய காணி ( விசேட ஒழுங்கு விதிகள் ) திருத்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திருத்த சட்ட மூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. கொடுப்பனவு ஆவணம் அனுமதி பத்திரம் வழங்கம் நடைமுறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நில அளவீடு படம் வரைதல் செயற்பாடுகளை நவீனமயப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 42ஆவது விடயம்)
காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய முறையாக அளவிடுவதுடன் விவசாய மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான வரைபடங்களை தயாரிப்பதற்கும் உரித்தான சான்றிதழ் நன்கொடை பத்திரம் மற்றும் அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட காணித் துண்டுகளில் முறையாக செய்து வரைபடத்தை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அப்படியிருந்த போதிலும் இதற்காக பயன்படுத்தக் கூடிய மனிதவள மற்றும் பௌதீக வளங்களில் வரையறை காரணமாக இதற்கு நீண்ட காலம் செல்லும் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான திட்டமொன்றை ஒரு பிரிவை நடைமுறைப்படுத்தவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதற்கமைவாக இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் 732000 காணித் துண்டுகளை அளவீடு செய்து 696000 நன்கொடை பத்திரங்களை வழங்குவதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் உத்தேச திட்டத்தின் முதலாவது நடவடிக்கையின் 3 வருட காலத்துக்குள் நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதற்கு தேவையான நிதியை பெற்றக்கொள்வதற்காக தேசியக் கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க சமர்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. கொம்பனி தெருவில் வேகந்த பிரதேசத்தை மறுசீரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 44ஆவது விடயம்)
கொம்பனி தெருவில் வேகந்த பிரதேசத்தில் சுமார் 47 ஏக்கர் (19.4 ஹெக்டர்) பிரதேசம் நவம்புரய என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தேச பிரதேச ரீதியில் மிகவும் சிறிய அளவிலான வீட்டு அலகுகள் 1200 அளவில் அமைக்கப்பட்டிருப்பதினால் அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சில சிரமங்கள் ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் காணி உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் நடைமுறையின் கீழ் அவர்களுக்கு நன்மைகள் கிடைக்கக் கூடிய வகையில் கொம்பனி வீதிக்குள் நகர பிரதேசத்தை மறு சீரமைப்பதற்கான நவம்புர திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17.மொறட்டுவ உசாவிய வத்த என்ற இடத்திலுள்ள வீடுகளை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 46 ஆவது விடயம்)
அரசாங்கத்துக்கு உட்பட்ட மொறட்டுவ உசாவிய வத்த என்ற காணியில் தற்பொழுது 50 குடும்பங்கள் வாழ்வதுடன் இவர்களுள் 30 குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வாழ்கின்றனர். எஞ்சிய 20 குடும்பங்கள் அரச சார்பற்ற அமைப்புக்களினால் 2010ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட மாடி வீட்டுடனான 2 கட்டிடத் தொகுதிகளில் குடியமர்ந்துள்ளனர். இந்த 50 குடும்பங்களுக்கான பொது சுகாதார வசதிகள் பயன்படுத்தப்படுவதுடன் இதிலுள்ள கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. தற்போது தற்காலிக வீடுகளில் குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு இந்த நிலப்பகுதியில் 30 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் மாடி வீடுகளில் குடியிருக்கும் 20 குடும்பங்களுக்கும் தேவையான சுகாதார வசதிகளை குடியிருப்பாளரின் பங்களிப்புடன் மேம்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18.விமான நிலைய பாதுகாப்பு திட்டம் மற்றும் சிவில் நிர்மாண சேவை பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல் தொடர்பில் விஷேட பாதுகாப்பு மதிப்பீட்டு வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 50ஆவது விடயம்)
இலங்கை 1948 இல் சர்வதேச சிவில் விமான சேவை தொடர்பாக இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது. அத்தோடு அதற்கமைவாக இலங்கை அந்த உடன்படிக்கை ஊடாக நாடு என்ற ரீதியில் செயற்படுகிறது. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 33ஆவது கூட்டத் தொடரில் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களாக சிவில் விமான சேவையை பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் சிவில் விமான சேவை மற்றும் தொடர்புப்பட்ட ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பான பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பரிந்துரைக்கமைய 2002ஆம் ஆண்டு தொடக்கம் உடன்படிக்கை செய்யப்பட்ட நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்படும் விமான நிலைய பாதுகாப்பு திட்டம் மற்றும் சிவில் விமான பாதுகாப்பு நிகழ்ச்சி நிரல் தொடர்பில் விஷேட பாதுகாப்பு மதிப்பீட்டு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் ஐஐஐ கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள விஸ்வ சுரக்சிததா விகனனய தொடர்ந்து மதிப்பீட்டு நடைமுறையின் கீழ் முன்னெடுப்பதற்காக சர்வதேச சிவில் விமான சேவை மற்றும் இலங்கைக்கிடையில் புரிந்துணர்வை உடன்படிக்கை எட்டுவதற்காக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19.அழிவை ஏற்படுத்தும் நிலக்கண்ணிவெடி பயன்பாடு மொத்தமாக ஒன்று திரட்டுதல் தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் தடைசெய்தல் மற்றும் அவற்றை அழிப்பது தொடர்பான இணக்கப்பாடு (ஒட்டாவ இணக்கப்பாடு) இலங்கையில் நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)
நிலக்கண்ணி வெடி பயன்பாடு மொத்தமாக சேகரித்தல் தயாரித்தல் மற்றும் பரிமாரலை தடை செய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பான இணக்கப்பாட்டை (ஒட்டாவ இணக்கப்பாட்டை) இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு அதனை 2018 ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இணக்கப்பாட்டில் 9 ஆவது சரத்தின் மூலம் நபரினால் அல்லது இணக்கப்பாட்டு அதிகாரி எல்லை அல்லது நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் எல்லைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இணக்கப்பாட்டின் கீழ் அரச தரப்பினருக்கு தடை செய்யப்பட்டுள்ள ஏதேனும் செயற்பாட்டை தடுத்தல் மற்றும் முற்றுகைக்காக தண்டனையை வழங்தல் உள்ளிட்ட அனைத்து பொருத்தமான உடனடி நிர்வாகம் மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான தரப்பினர் என்ற ரீதியில் இலங்கை கடமைப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த இணக்கப்பாட்டின் விதிமுறைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தக் கூடிய iயில் திருத்த சட்டமொன்றை தயாரிப்பதற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதிக்கு அமைவாக திருத்த சட்டமூலம் தயாரிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
20. விளையாட்டு சங்கங்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கான உத்தரவுகளை பாராளுமன்றத்தில் சமரப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 56ஆவது விடயம்)
முறையாகவும் நீதியான முறையிலும் விளையாட்டு சங்கங்களுக்கான தேர்தல் நடத்துவதன் மூலம் தேசிய விளையாட்டு சங்கங்களின் செயற்பாடுகளை முறையாக முன்னெடுப்பதற்காக 1973ஆம் ஆண்டு இலக்கம் 25 இன் கீழான சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய விளையாட்டுத் துறை அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதிநிதிகளை உள்ளடக்கிய 2018.09.22, 2018.01.18 மற்றும் 2019.01.10 திகதி வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்காக தொலைத் தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் இயந்திர உபகரண தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பன்முக நிறுவனங்களை கவருதல் (நிகழ்ச்சி நிரலில் 58ஆவது விடயம்)
மின்னணு மற்றும் இலத்திரனியல் கருவிகள் தொழிற்துறை உலகளாவிய ரீதியில் மதிப்பூட்டப்பட்ட விநியோக வலைப்பின்னல் ஒன்றிணைந்து வருவதுடன் தொழில்நுட்ப புரிந்துணர்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் தயாரிப்பு கைத்தொழில் வகைப்படுத்தலுக்கு அமைவாக நாட்டின் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மின்னணு உபகரணங்ள் தொழிற்துறையில் நடுத்தர மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப தரத்திற்கு உட்பட்டவையாகும.; இதற்கமைவாக வாகனம் மின்சாரம் தொலைத்தொடர்பு பாவனை இலத்திரனியல் பொருட்கள் கைத்தொழில் சுய செயற்பாடு இணையதள மென்பொருள்களை தயாரித்தல் மற்றும் ஏனைய பல்வேறு பிரிவு உபகரணங்களின் தயாரிப்புக்களும் இதற்கு உட்பட்டதாகும். இந்த துறையில் நாட்டின் கைத்தொழில் துறையினருக்கு ஐளுழு சான்றிதழை கிடைக்க வேண்டியத் தேவை உண்டு. இதற்கு தொழில் சட்ட விதிகளின் கீழ் செயல்படுவார்கள்.
நாட்டின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முன்மாதிரியிலுள்ள ஆரம்ப நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களில் ஈடுபட்டுள்ளதுடன் அதற்காக இந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக பாரியளவிலான நிறுவனங்களுடன் ஒன்றிணைதல் அத்தியாவசியமாகும். இதற்கமைவாக இலங்கையில் இவ்வாறான வர்த்தக பல்லின நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வசதிகளுக்காக பல்லின தேசிய நிறுவனங்களை கவரும் வகையில் செயற்படும் பொருட்டு அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் மாத்தறை ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ,திருகோணமலை ,மன்னார் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களில் அமைந்துள்ள 6 பழமை வாய்ந்த கோட்டைகள் தொல்பொருள் திணைக்களத்தினாலும் தனியார் துறை மற்றும் ஒன்றிணைந்த வகையில் அபிவிருத்தி செய்வதற்காக 2018 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. இதற்கமைவாக மன்னார் கோட்டையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஆலோசனை தொல்பொருள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்த கோட்டை நீர் ஓடையை அகழுதல் போன்ற பணிகள் தொடர்பில் இலங்கை காணி; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் மேற்கொள்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. புத்தளம் லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்றாவது அலகின் பொயிலர் டேர்பொயின்ட் மற்றும் உபகரணங்களின் செயற்பாட்டுக்கான திறனாற்றல் வலு சக்தியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் )
புத்தளம் அனல்மின் நிலையம் நிர்மாணித்த பிரதான ஒப்பந்தக்காரரான சீன மெஷினரி என்ஜினியர் (ஊஆநுஊ) நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபைக்கிடையில் நிலவும் மறு சீரமைப்புக்கான தொழில்நுட்ப புரிந்துணர்வு உடன்படிக்கை 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையில் வலுவானது இதற்கமைவாக புத்தளம் லக்விஜய அனல்மின் நிலையத்தின் 3ஆவது அலகின் பொயிலர் டேர்பொயின்ட் மற்றும் உபகரணங்களில் பாராமரிப்புக்கான தினாற்றல் செயற்பாட்டு படையணியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் தயாரிக்கப்பட்டு நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கமைய சைனா மெஷினரி இன்ஜினியரின் கோப்ரேஷன் (ஊஆநுஊ) நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. புத்தளம் அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்தல் (நிகழ்சி நிரலில் 64ஆவது விடயம்)
புத்தளம் அனல்மின் நிலையத்திற்குத் தேவையான 360000 மெட்ரிக் தொன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் குழுவின் சிபாரிசுக்கமைய சிங்கப்பூர் ஆஃளு. வுசயகபைரசய Pவந. டுவன. நிறுவனத்திடமிருந்து 1 மெட்ரின் தொன் 94.4 மில்லியன் டொலரின் கீழ் கொள்வனவு செய்வதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

25. பன்னிபிட்டிய கீரீட் மின் வலைப்பின்னல் துணை நிலையத்தில் 100 மெகாவோல்ட் மின்வலுவைக் கொண்ட பிரேக்கர் சுவிட்ச் கெபாசிட்டர் பெங்குவை பொருத்துவதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் )
மின் விநியோகத்தில் நம்பிக்கை தன்மையை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பன்னிபிட்டிய கீரீட் உப மின் நிலையத்தில் 100 மெகா வோல்ட் வலுவைக் கொண்ட பிரேக்கர் சுவிச் கெபசிட்டர் பெங்கு என்ற கருவியைப் பொருத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவின் ஆஃள. ளநiஅநளெ டுவன நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நீர்த்திட்ட ஆலோசனையின் மூலம் தம்புள்ளை மற்றும் கண்டலம பிரதேசத்திற்கான நீரை விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் (நிகழச்சி நிரலில் 66 ஆவது விடயம்)
மாகாண மேம்பாட்டு திட்டத்தின் கீழான உப திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் மத்திய மாகாண வரட்சி தம்புள்ளை நீர் திட்ட முறை மூலம் தம்புள்ளை கண்டலம பிரதேசத்திற்கான நீர் விநியோகத்தை நீடிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 565.39 மில்லியன் ரூபாவிற்கு ஸ்கோயா மேன் இன்ஞினியர் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. 2019 நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் விவாதம் தொடர்பான உத்தேச நிகழ்ச்சி நிரல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரவு செலவு திட்ட உரை ( வரவு செலவு திட்ட 2ஆவது வாசிப்பு 2019ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் 2019.03.06 தொடக்கம் 2019.03.12 திகதி வரையிலும் குழுநிலை விவாதம் 2019.03.13 தொடக்கம் 2019.04.05 திகதி iயில் நடத்துவதற்கும் வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு 219.04.05ஆம் திகதி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

28. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவான தகவல்களை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 94ஆவது விடயம்)
2016ஆம் ஆண்டு இல 12 இன் கீழான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தீர்மானங்களுக்கான தகவல்களை கோறும் பிரஜை ஒருவருக்கு அவற்றை வழங்குவது இது வரை காலமும் அமைச்சரவை செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது இருப்பினும் அமைச்சரவை தீர்மானம் மற்றும் தகவல்களை வழங்குவது மிகவும் சாத்திரமான வகையிலும் பயனுள்ள வகையிலும் வழங்கும் நோக்கில் இந்த தகவல்களுடன் தொடர்புபட்ட விடயத்திற்கு பொறுப்பான ரேபியா அமைச்சினாலும் கோரிக்கைகளை சமரப்;பிக்கும் பிரஜைகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு யாப்பு அலுவல்கள் தொடர்பான அமைச்சரவை துணைக்குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தகவல் அறிந்து கொள்ளும் உரிமை சட்டத்தின் கீழ் பிரஜை ஒருவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைக்கு அமைவாக தமது அமைச்சின் விடயதானத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் மற்றும் அது சம்பந்தமான ஆவணம் பிரஜைக்கு நேரடியாக விநியோகிப்பதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் அமைச்சரவை அல்லாத செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் ஏதேனும் அமைச்சரவை ஆவணத்துக்கு உட்படாத அல்லது அமைச்சு விடயதானத்திற்கு உட்படாத தகவல் தொடர்பில் அமைச்சரவையினால் அமைச்சரவை கூட்டங்களில் ஏனைய விடயங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் மாத்திரம் அமைச்சரவை அலுவலகத்தினால் விநியோகிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top