பதுளை சாவியா பள்ளிவாசல் பாலத்தை விஸ்தரிக்க
இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை
பதுளை,
சாவியா ஜூம்ஆ
பள்ளிவாசலுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல்
காசிம் இன்று
விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பதுளை
சாவியா ஜூம்ஆ
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நீண்ட காலமாக
புனரமைக்கப்படாமல் இருக்கும் சிறிய
பாலத்தை புனரமைத்து
விஸ்தரிப்பதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல்
காசிம் நடவடிக்கை
எடுத்துள்ளார்.
இந்தப்
பாலம் நீண்டகாலமாக
விஸ்தரிக்கப்படாமல் இருப்பதால் இதன்
ஊடாகப் பயணிக்கும்
மக்கள் சிரமத்தை
எதிர்கொண்டு வருகின்றனர்.
பதுளை
மாவட்ட ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
மத்திய குழுவினர்
சுகாதார இராஜாங்க
அமைச்சர் பைசல்
காசிமின் கவனத்திற்கு
இதைக் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில்
குறித்த தலத்திற்கு
விஜயத்தினை மேற்கொண்ட பைசல் காசிம் இதன்போது
நிர்வாகத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை
நடத்தியுள்ளார்.
இதனை
தொடர்ந்து குறித்த
பாலத்தை புனரமைப்பதற்கான
நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக இராஜாங்க அமைச்சர்
பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.
இதன்போது
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் உயர்
பீட உறுப்பினரும்
பதுளை மாவட்ட
அமைப்பளருமான வீ.தாஜூதீன், ஹாலிஎல பிரதேச
சபையின் முன்னாள்
உறுப்பினர் நிஹார் மாஸ்டர், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் பதுளை வட்டார அமைப்பாளர் இம்தியாஸ்
பாறூக், பள்ளிவாசல்
நிர்வாகத்தினர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.