புல்வாமா தாக்குதலுக்கு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம்
புல்வாமாவில்
துணை ராணுவ
வீரர்கள் சென்ற
வாகனங்கள் மீது
நடந்த தற்கொலை
தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கண்டனம்
தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்
மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து
547 பேர் விடுமுறை
முடிந்து நேற்று
பணிக்கு திரும்பினர்.
அவர்கள் அனைவரும்
நேற்று அதிகாலை
78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு
திரும்பி கொண்டிருந்தனர்.
அந்த வாகனங்கள்
அணி வகுத்து
செல்ல பாதுகாப்புக்கு
கவச வாகனங்களும்
உடன் சென்றன.
ஸ்ரீநகர்
- ஜம்மு நெடுஞ்சாலையில்
புல்வாமா மாவட்டம்
அவந்திப்போரா பகுதியில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன்
வெடி குண்டுகள்
நிரப்பிய சொகுசு
காரை வேகமாக
ஓட்டி வந்து
ராணுவ வீரர்கள்
வந்த ஒரு
பஸ் மீது
மோதினான்.
இதில்
வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் பயங்கரமாக வெடித்தன.
பஸ்சில் இருந்த
76-வது பட்டாலியன்
பிரிவைச் சேர்ந்த
ராணுவ வீரர்கள்
அனைவரும் உடல்
சிதறி தூக்கி
வீசப்பட்டனர். அருகில் வந்த மற்ற வாகனங்களும்
சேதமடைந்தன.
இந்த
தற்கொலை தாக்குதலில்
40 துணைநிலை ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலர்
படுகாயம் அடைந்து
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த
தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
மற்றும் உலக
நாடுகளின் தலைவர்களும்
கண்டனம் தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில்,
இலங்கை பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
தனது டுவிட்டர்
பக்கத்தில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில்,
'காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட
இந்த கொடூரமான
தற்கொலை தாக்குதலை
வன்மையாக கண்டிக்கிறேன்.
1989ல் இருந்து
நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிகவும் மோசமான
தாக்குதல் ஆகும்.
ராணுவ வீரர்களை
இழந்து தவிக்கும்
அவர்களின் குடும்பத்திற்கும்,
பிரதமர் நரேந்திர
மோடிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன்' என ரணில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதல்
சம்பவத்திற்கு கவலை தெரிவித்து மோடிக்கு கடிதமும்
அனுப்பியுள்ளார் .
0 comments:
Post a Comment