கொழும்பை அலங்கரித்த பூசணிக்காய்கள்!

கொழும்பில் நடைபெறும் பூசணிக்காய் திருவிழாவினை பார்வையிட பெருந்திரளான மக்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
பூசணி விவசாயம் செய்வோர் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் தடுமாறுவதால் அவர்களின் நன்மை கருதி பூசணி விழா ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு இன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடததப்பட்டது.

இந்த திருவிழாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பூசணிக்காய்கள் விற்பனை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பூசணிக்காயில் தயாரிக்க கூடிய உணவுகள் பலவற்றை இதன்போது அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய புடிங், பூசணி கேக், பூசணி உருண்டை ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

கல்கிஸ்சையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரதான சமையல் கலைஞனரினால் திருவிழாவுக்கான விசேட உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பூசணிக்காய் திருவிழாவினை காண உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top