பிரபல அரசியல்வாதியின் சொத்துக்களை
விற்பனை செய்து கடனை செலுத்துமாறு
நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற
உறுப்பினர் வங்கியில் பெற்ற கடனை செலுத்த
தவறியதினால், அவரது சொத்துக்களை விற்பனை செய்து
கடனை செலுத்துமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி
ஒன்றில் ஒரு
கோடி 20 இலட்சம்
ரூபாவினை கடனாக
பந்துல குணவர்தன
பெற்றுள்ளார். எனினும் அதனை செலுத்த அவர் தவறியுள்ளார்.
இந்நிலையில்
நுகேகொடயிலுள்ள அவரின் சொத்துக்களை விற்று பணத்தை
பெற்றுக் கொள்ளுமாறு
கொழும்பு வர்த்தக
நீதிமன்ற நீதிபதி
அஷான் மரிக்கார்
உத்தரவிட்டுள்ளார்.
ஏலம்
என்பதை அறியாமல்
ஆவணத்தில் கையொப்பமிட்டு
விட்டதாக பந்துல
குணவர்தன நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளார்.
பகுதி
நேர வகுப்பு
ஆசிரியரான பந்துல
குணவர்தன போன்ற
ஒருவரினால் கூறப்பட்ட அந்த கருத்தினை ஏற்றுக்
கொள்ள முடியாதென
நீதிபதி தெரிவித்துள்ளார்.
பந்துல
குணவர்தன மற்றும்
அவருக்கு சொந்தமான
அல்பா டிஜிட்டல்
தனியார் நிறுவனத்திற்கு
பெற்றுக் கொண்ட
கடன் பணம்
மற்றும் அதற்கான
வட்டி பணத்தை
திருப்பி செலுத்த
அவர் தவறியுள்ளார்.
இதனால்
அடகு வைத்த
சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு அனுமதி வழங்குமாறு
முறைப்பாட்டாளர் நீதிபதியிடம் கோரியுள்ளார்.
பந்துல
குணவர்தன 2000ஆம் ஆண்டில் இந்த கடன்
பணத்தை பெற்றுக்
கொண்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..
தான்
கையொப்பமிட்டது ஏல கடிதத்தில் என்பதனை பந்துல
நன்கு அறிந்திருந்தார்
என்பதனை நீதிபதி
தீர்ப்பின் மூலம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்
0 comments:
Post a Comment