பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் விமானி
அபினந்தனின் தந்தையின் உருக்கமான அறிவிப்பு




எனது மகன் குறித்த தகவல்களை பற்றி கூறும் நிலையில் இல்லாததால் தயவு செய்து எங்களை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய விமானி அபினந்தனின் தந்தை ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவை சேர்ந்த மிக்-21 ரக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்து குதித்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார்.

கைதான விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. விமானி அபினந்தன் சென்னை, தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றவர்.

2004ம் ஆண்டு முதல் இந்திய விமானியாக பணியாற்றி வருகிறார். இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் சென்னையில் இவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது தந்தை வர்தமான் விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றியவர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர்கள் சென்றபோது சென்னை, சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள ஜல்வாயூ விஹார் இல்ல கேட்டை அபினந்தனின் பெற்றோர்கள் பூட்டி விட்டனர்.

இதுகுறித்து அபினந்தனின் தந்தை வர்தமான், விங் கமெண்டரான எனது மகன் பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

அதுகுறித்து பேசும் மனநிலையில் நாங்கள் தற்போது இல்லை. ஆகையால் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்’’ என எழுதி அவர் கேட்டில் மாற்றி உள்ளாராம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top