மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி
ஞானசார தேரரிடம்
குசலம் விசாரிப்பதற்காக
வெலிக்கடை சிறைக்குச் சென்றார்
அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, 
மனோ கணேசன் ஆகியோரும் சென்றிருந்தனர்

சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரை குசலம் விசாரிப்பதற்காக மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் அங்கு ஞானசார தேரர் - துமிந்த சில்வா - டீ ஐ ஜி நாலக்க சில்வா ஆகியோரை சந்தித்து பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top