‘‘பாகிஸ்தானின் தூதர் சவூதி இளவரசர் வருகிறார்’’
- மெகபூபா முப்தியை சரமாரியாக விமர்சித்த நெட்டிசன்கள்

வூதி இளவரசர் பின் சல்மான் நாளை இந்தியா செல்லவுள்ள நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசை விமர்சித்து வெளியிட்டுள்ள ட்வீட் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவருக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவூதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்கு பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளார்.

பாகிஸ்தான் சென்ற சவூதி இளவரசர் சல்மானை பாகிஸ்தான் நாட்டின் வழக்கமாக பின்பற்றப்படம் வழக்கமான அரசு நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார்.

இதைத்தொடர்ந்து இரு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.

பின்னர் இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சவூதியில் பணியாற்றும் 25 லட்சம் பாகிஸ்தானியர்களின் சார்பாக வைத்த கோரிக்கையை சவூதி இளவரசர் ஏற்றுக் கொண்டுள்ளார். பாகிஸ்தானின் தூதராக சவூதி அரேபியாவில் இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் பின் சல்மான் கூறினார். பாகிஸ்தான் மக்களின் மனங்களை சவூதி இளவரசர் வென்று விட்டார்’’ என இம்ரான் கான் தெரிவித்து இருந்தார்.

பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு சவூதி இளவரசர் பின் சல்மான் நாளை இந்தியா செல்கிறார். இதனை சுட்டிக்காட்டி, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தர்மசங்கடமான சூழல், குறிப்பாக சவூதி இளவரசர் இந்தியாவுக்கு நாளை வருகை தரும் நிலையில் இந்த சூழல். கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்திய அரசு’’ என தெரிவித்து இருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட கூடுதலாக இந்திய தொழிலாளர்கள் முக்கியம் என தெரிவித்துள்ளனர்.

இதுபோலவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பணத்துக்காக பிச்சை எடுப்பதாக கூறி படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தொழிலாளர்களை பற்றி சவூதி அரேபியா கவலைப்பட்டால் இந்திய தொழிலாளர்களும் தங்கள் யார் என்பதை நிருபிப்பார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மெகபூபா முப்திக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள் ‘‘இப்போது என்ன தர்மசங்கடமான சூழ்நிலை வந்தது. சவூதி மன்னரை நம்பி தான் இந்திய தொழிலாளர்கள் இருக்கிறார்களா’’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஓட்டுநராக மாறி இருப்பதன் மூலம் சவூதியின் அடிமை என்பதை உறுதி செய்துள்ளார் என சிலர் கூறியுள்ளனர்.

மெகபூபா முப்தி அவர்களே பிரிவினைவாதியை ஆதரிக்கும் உங்களுக்கு தர்மசங்கடமான சூழலாக தான தெரியும் என வேறு சிலர் கூறியுள்ளனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top