ஓடும் பஸ்ஸில் தேரருக்கு ஏற்பட்ட நிலை!

முஸ்லிம் நபருக்கு குவியும் பாராட்டு



ஓடும் பஸ்  ஒன்றில் திடீர் சுகயீம் அடைந்த நிலையில், சுயநினைவை இழந்து போராடிய பௌத்த தேரர் ஒருவருக்கு முன்வந்து உதவிய முஸ்லிம் நபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளன.

மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸில் பயணித்த பௌத்த தேரர் திடீர் சுகயீனம் அடைந்த நிலையில் சுயநினைவை இழந்தார்.

இதனால் அந்த தேரருடன் வந்த தேரர்களும் செய்தவறியாது திகைத்து நின்றனர்.

அத்துடன், குறித்த பஸ்ஸில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் பயணித்த போதிலும், தேரருக்கு உதவ எவரும் முன்வரவில்லை.

பலரும் உதவுங்கள், உதவுங்கள் என சத்தமிட்டனரே தவிர யாரும் உதவ முன்வரவில்லை. எனினும், பஸ்ஸில் பயணித்த குறித்த முஸ்லிம் நபர் விரைந்து செயற்பட்டு தேரருக்கு உதவினார்.

அத்துடன், குறித்த தேரரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கும் வகையிலும், அந்த நபர் உதவி செய்திருந்தார். இது குறித்த காணொளி ஒன்று சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில், தேரருக்கு உதவிய அந்த நபருக்கு முஸ்லிம் நபருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு மழை குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேரருக்கு உதவிய மடவளை சுல்பி சமீன் தனது அனுபவத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார்,


இன்று மடவளையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கும்
பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்திருந்த பேரின மதகுரு திடிரென வாந்தி, வாயில் நுரை தள்ள, கண்கள் செருகிய நிலையில் சுயநினைவை இழந்து சீட்டில் பக்கவாட்டில் சரியும்போது அவருக்கு இரண்டு சீட்கள் தாண்டி இருந்த நான் துரிதமாக எழுந்து அவரைத் தாங்கிப் பிடித்தேன்.

அவரை கைகளில் தாங்கியபடி முதுகில் தட்டி பேச்சுக்கொடுத்து சுயநினைவை அடையச் செய்தேன். தொடர்ந்து (சளியுடன கூடிய) வாந்தி எடுத்து சுயநினைவை அடைந்தார். அதிக சளித்தொல்லையால் சாப்பாடும் சமிபாடைந்திருக்கவில்லை. பேக் ஒன்றை பெற்று வாந்தியை எடுக்க உதவினேன். அவர்மேல் படிந்திருந்த வாந்தியை வாய் முதற்கொண்டு துடைத்து விட்டேன்.

நான் கவனித்த வகையில் நானும் இன்னொருவரும் தான் முஸ்லிம்கள். பஸ்ஸில் அனைத்து சீட்களும் நிரம்பி நின்று கொண்டும் சிலர் பயணித்தனர். இருந்தாலும் ஒருவரும் உதவ முன்வரவில்லை.

உதவுங்கள் உதவுங்கள் என்று சொன்னார்களே தவிர. உடன் வந்திருந்த 25 வயதையொத்த மதகுருவும் என்ன செய்வதென்று திகைத்து நின்றாரே தவிர ஒத்துழைக்கவில்லை.

இருந்தாலும் ஆச்சரியம் கலந்த வெட்க உணர்வு அவர்கள் முகத்தில் விளங்கியது. பலர் போட்டோ/வீடியோ எடுப்பதும் விளங்கியது.

பஸ் கண்டியை அடைந்ததும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முச்சக்கர வண்டியில் ஏற்றி நானும் ஏற முற்பட்டபோது மதகுருவுடன் துணைக்கு வந்திருந்த மதகுரு தங்களுக்கு சமாளித்துக்கொள்ள முடியும் என்றதும் ஓட்டுனரிடம் 100/= யை கொடுத்து வழியனுப்பினேன்.

வாந்தி பையை பஸ்ஸில் எனக்கு ஒத்தாசைக்காக பக்கத்தில் நின்ற பாரூக் நானாவிடம் ( மடவளை பங்களா கெதரயில் திருமணம் முடித்த கண்டியை சேர்ந்தவர்) கொடுத்து கழிவுத் தொட்டியில் போடும்படி கூறினேன்.

பஸ்ஸை விட்டிறங்கிய மக்கள் தங்கள் பாட்டில் விரையும் நிலையில் பெண்கள் சிலர் என்னை சூழ்ந்து நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதிகமான நம் இனத்தவர் இருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை என்பது வேதனையாக இருப்பதாகவும் கூறினர்.

இவற்றிற்கு மேலாக , இரக்க சுபாவம், உதவி செய்யும் பண்பு என்பன குலம் கோத்திரம் ஜாதி மதம் நிறம் என்பவற்றைத் தாண்டிய மனிதநேயம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் குடிகொண்டு நடைமுறைப்படுத்தினால் சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை (ஓரளவாவது) உருவாக்கலாம்.

பூரண மனத்திருப்தியுடன் இன்றைய நாள் அமையப்பெற்றதற்கு காரணமான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

அல்ஹம்துலில்லாஹ்!

சுல்பி சமீன்.
22-02-2019

இச்சம்பவம் தொடர்பில் பஸ்ஸினுள் இருந்த பெரும்பான்மை இன பெண் ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்தது உங்கள் பார்வைக்கும்.
ஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெரும்பான்மையினர் வேடிக்கை பார்க்க, துரிதமாக செயல்பட்ட மடவளை சுல்பி நானா..

මෙය අද දින උදෑසන කටුගස්තොට සිට මහනුවර දක්වා පැමිණි බස් රථය තුල සිදු වූ ඉතා සංවේදී සිදුවීමකි...බසයේ ගමන් ගත් සංඝයා වහන්සේ නමක් හදිසියේ රෝගාතර වී අතපය දරදඩු වී වමනය කරන්නට විය..බසය පිරී ඉතිරී යන පමණට මිනිසුන් සිටියද මෙතුමාට ප්රතිකාර කිරීමට ඉදිරිපත් වූයේ මුස්ලිම් ජාතික මහත්මයෙකි..වහා ක්රියාත්මක වූ මොහු සංඝයා වහ්න්සේට අවැසි සියලුම ප්රතිතිකාර කොට ඔහුගේ වියදමින් සංඝයා වහන්සේව රෝහල වෙත රැගෙන ගියේය..බසයෙන් හරි අඩක්ම සිංහල බෞද්ධයන්ගෙන් පිරී තිබුනද, සමහරක් තම්බි මරක්කලයින් ලෙස හංවඩු ගසනා මුස්ලිම් ජාතික මෙම මහත්මා නොසිටින්න අද එම සංඝයා වහන්සේ අපවත් වීමටද ඉඩ තිබුනි.මෙ අවස්ථාවේ එම බසයේ මමද සිටිය මුත් සංඝයා වහන්සේලා හා ස්පර්ශය කාන්තාවන් හට අකැප බව දැන සිටි හෙයින් නිහඩ උනෙමි..මහත්මයාණෙනි ඔබට බෙහෙවින් පින්..ඔබට දීර්ඝායූශ...වේවා..ගිලනෝපස්ථානය උතුම් පුණ් කර්මයකි..







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top