கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும்
தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய
ஆளுநர் 50 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு
கிழக்கு பாடசாலைகளில்
நிலவும்
மாணவர்களுக்கான தளபாட பற்றாக்குறையை
நீக்கும் விதத்தில்
50 மில்லியன் ரூபாவை விசேட நிதி ஒதுக்கீடாக
கிழக்கு மாகாண
ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
வழங்கியுள்ளார்.
கிழக்கு
மாகாண பாடசாலைகளுக்கு
கடந்த எட்டு
வருடங்களாக தளபாடங்களுக்காக மாகாண சபையின் எதுவித
நிதி ஒதுக்கீடும்
வழங்கப்படாமை காரணமாக பாடசாலைகளில் சுமார் 75,000 மாணவர்கள்
தரையில் இருந்து
கற்பதாக ஆளுநரது
கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அவசர நிதி
ஒதுக்கீடாக 50 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு
மாகாணப் பாடசாலைகளில்
நிலவும் தளபாடப்
பற்றாக்குறையை நீக்கும்
வகையில் சவூதி
அரசாங்கத்துடன் விசேட பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியுதவி
விரைவில் கிடைக்கப்பெறும்
எனவும்
ஆளுனர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment