மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக
அங்கீகரிக்க சீனா மறுப்பு
இந்தியாவின் முயற்சிக்கு மீண்டும் முட்டுக்கட்டை
பாகிஸ்தானில்
செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத
அமைப்பின் தலைவர்
மசூத் அசாரை
சர்வதேச தீவிரவாதியாக
ஐநா பாதுகாப்பு
கவுன்சில் மூலம்
அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு
அளிக்க முடியாது
என்று சீனா
மீண்டும் தெரிவித்துள்ளது.
ஜம்மு
காஷ்மீர் புல்வாமா
மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள்
பயணித்த பஸ் மீது ஜெய்ஷ்
இ முகமது
தீவிரவாதி தற்கொலைப்படைத்
தாக்குதல் நடத்தினார்.
இதில் சிஆர்பிஎஃப்
வீரர்கள் 45 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் படுகாயமடைந்தனர்.
புல்வாமா
தீவிரவாத தாக்குதலுக்குக்
கண்டனம் தெரிவித்துள்ள
சீனஅரசு, தாக்குதலுக்குக்
காரணமான ஜெய்ஷ்
இ முகமது
அமைப்பின் தலைவரைத்
தடை செய்ய
ஆதரவு அளிக்க
மறுக்கிறது.
ஐநா
பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச
தீவிரவாதியாக அங்கீகரிக்க இந்தியா கொண்டுவந்த வந்த
தீர்மானத்தை பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் நோக்கில்,
சீனா தனது
வீட்டோ அதிகாரத்தால்
ரத்து செய்தது.
அதன்பின் அமெரிக்கா,
இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கொண்டுவந்த
போதிலும் நிறைவேற்ற
முடியவில்லை.
இதுகுறித்து
சீன வெளியுறவுத்துறை
அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜெங் ஷுவாங் நிருபர்களிடம்
இன்று கூறியிருப்பதாவது:
ஜம்மு
காஷ்மீர் புல்வாமாவில்
நடந்த தற்கொலைப்படை
தாக்குதலை அறிந்து
அதிர்ச்சி அடைந்தோம்.
தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கும்,
அவர்களை இழந்து
வாடும் குடும்பத்தினருக்கும்
எங்களின் ஆழ்ந்த
அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். காயம் அடைந்த வீரர்கள்
விரைவாக குணமடைய
வேண்டும்.
அனைத்து
வடிவிலான தீவிரவாத
செயல்களையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது, கண்டிக்கிறது.
இந்த ஆசிய
பிராந்தித்தில் உள்ள தீவிரவாத அச்சுறுத்துலை பாதிக்கப்பட்ட
மற்ற நாடுகள்
எங்களுடன் ஒத்துழைத்தால்
முறியடிக்கலாம், பிராந்தியத்தில் அமைதியையும்,
நிலைத்தன்மையும் ஏற்படுத்த முடியும்.
ஜெய்ஷ்
இ முகமது
அமைப்பின் தலைவர்
மசூத் அசாரை
சர்வதேச தீவிரவாதியாக
அங்கீகரிக்கும் முடிவுக்கு ஆதரவு அளிக்க இயலாது.
எங்களின் நிலைப்பாட்டில்
நாங்கள் தெளிவாக
இருக்கிறோம். தீவிரவாத அமைப்புகளையும், தீவிரவாதிகளையும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 குழு பட்டியலிடும் முறையில் தெளிவான
விதிமுறைகள், காரணம், வரையறைகள் தேவை.
ஒரு
அமைப்புக்கும், தனிமனிதருக்கும் தடை விதிக்கும் விவகாரத்தில்
சீனா எப்போதும்
பொறுப்புடன், ஆரோக்கியமான வகையில் செயல்படும்.
ஜெய்ஷ்
இ முகமது
எனும் அமைப்பு
பாதுகாப்பு கவுன்சிலின் தடைப்பட்டியலில்
இருக்கிறது. ஆனால், தனிமனிதரை தடைப் பட்டியலில்
கொண்டுவரும் போது, நாங்கள் எப்போதும் பொறுப்புள்ள
வகையில், திறன்மிக்க
வகையில்தான் செயல்படுவோம். சூழலின் தேவைக்கு ஏற்றார்போல்
நாங்கள் எப்போதும்
செயல்பட்டு இருக்கிறோம். அதேசமயம், இந்தியாவுடன் நெருங்கிய
நட்புறவைப் பாராட்டுவதில் மாற்றம் ஏதும் இருக்காது.
இவ்வாறு ஜெங்
ஷுவாங் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment