ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில்

142 பேர் உயிரிழப்பு!



புக்ராயன்:உத்தர பிரதேச மாநிலத்தில், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில்,142 பேர் உயிரிழந்த னர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்திய மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், .பி.,யின் கான்பூருக்கு அருகே உள்ள புக்ராயன் பகுதியில்,நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென தடம் புரண்டது. இதில், ரயிலின், 14 பெட்டிகள்
கவிழ்ந்தன. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக கோரமான இந்த ரயில் விபத்தில், 142 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; அதில்,75 பேர் பலத்த காயமடைந்தனர். காயம டைந்த பலரது நிலைமை மோசமாக இருப்ப தால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
உடனடியாக, பொலிஸார், தீயணைப்பு படையி னர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ரயிலின், இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி உடைய, 'எஸ் - 1' மற்றும் 'எஸ் - 2' பெட்டிகள் தடம் புரண்ட வேகத்தில், மோதி நேர்க்குத்தாக நின்றன. இந்த பெட்டிகளில் தான், பாதிப்பு அதிகமாக இருந்தது.
.பி.,யின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க் கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு, காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ரயில்வே உயர் அதிகாரிகளும், .பி., மாநில பொலிஸ், அரசு உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்தனர்.

இந்திய ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா, உடனடியாக விரைந்து, மீட்புப் பணிகள் குறித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இந்த விபத்து குறித்து, இந்திய ரயில்வே வாரியத்தின் பாதுகாப்பு ஆணையரின் விசாரணைக்கு, ரயில்வே உத்தரவிட்டுள்ளது.'தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி, சீரமைப்பு பணிகள்முடிவதற்கு, 36 மணி நேரம் ஆகும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தால், இந்த மார்க்கத்தில் இயக்கப் படும் ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டன; சில, மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள், தங்கள் ஊர்களுக்கு செல்ல, மாற்று போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, .பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.
''விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்,'' என, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உள்ள .பி., மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித் துள்ளார். தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங் கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித் துள்ளார்.இதைத் தவிர, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா, 3.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

சோகத்தில் மணப்பெண் 


கோர விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தன் திருமணத்துக்காக இந்த ரயிலில் சென்ற இளம்பெண், காணாமல் போன தன் தந்தையை தேடியது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்துாரைச் சேர்ந்த ரூபி, 20, தன் தந்தை, இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்களுடன், .பி.,யில் உள்ள மாவ் பகுதிக்கு, இந்த ரயிலில் புறப்பட்டார்.வரும், 1ம் திகதி ரூபிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், விபத்தில், ரூபி மற்றும் அவரது சகோதரிகள், சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.
ஆனால்,அவர்களது தந்தையை காணவில்லை; அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல்,குடும்பத்தோடு, இவர்கள் அங்கும் இங்கும் தேடி அலைந்தது, பரிதாபமாக இருந்தது. மேலும், தாங்கள் எடுத்து வந்த திருமணத்துக்கான ஆடைகள், நகைகளும் காணாமல் போனதாக ரூபி கூறியுள்ளார்.
விபத்தில் சிக்கி சேதமடைந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அதில், சகோதரர்களான இளம் சிறுவர்கள் இருவரும் அடங்குவர்; அவர்களது பெற்றோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

நொறுங்கிய பெட்டியில்உயிருடன் குழந்தைகள்
கான்பூரில் நேற்று நடந்த ரயில் விபத்தில், 'எஸ்-3' பெட்டிமுற்றிலும் சிதைந்து நொறுங்கியது. அதில் சிக்கிய பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர்; அவர்களின் உடல்களை மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
அப்போது, இறந்த பெண்ணின் உடல் அருகே 6, வயதுள்ள இரண்டு குழந்தைகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். இடிபாடுகள் விரைவாக அகற்றப்பட்டு, அந்த இரு குழந்தை களையும், மீட்புக் குழுவினர் மீட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் சர்மா, 42, குடும்பத்துடன், விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்தார். விபத்தில் அருணுடன், அவரது மனைவி மற்றும் மூத்த மகனும் காயமடைந்தனர். ஆனால், இளைய மகன் திரியானேஷ், 9, பற்றி தகவல் தெரியவில்லை. அந்த தம்பதி, நீண்ட நேரம் தேடியும், மகன் கிடைக்கவில்லை. இருவரும், அந்த பகுதி முழுவதும் தேடி அலைந்த காட்சி, காண்போரை கண் கலங்கச் செய்தது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top