ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
மூன்று எம்.பிக்கள்
இராஜினாமா?
பதிலாக மூன்று முக்கிய நபர்கள்!
ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மூவர் அடுத்த
சில வாரங்களில்
பதவிகளை இராஜினாமா
செய்யவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு
பதிலாக மூன்று
முக்கிய நபர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி
தீர்மானித்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
எதிர்வரும்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னர்
இந்த மூன்று
பேர் நாடாளுமன்ற
உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளனர்.
இவர்களில்
தொழில்சார் நிபுணர்களும் பிரபலமான இளைஞர் ஒருவரும்
அடங்குவதாக கூறப்படுகிறது.
பதவிகளை
இராஜினாமா செய்ய
தேசிய பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் விருப்பம் தெரிவித்துள்ளதுடன்
அவர்களில் ஒருவர்
மாகாணம் ஒன்றின்
ஆளுநராக நியமிக்கப்பட
உள்ளதாக பேசப்படுகிறது.
ஏனைய
இருவர் அரசாங்கத்தின்
உயர் பதவிகளில்
நியமிக்கப்பட உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணிக்கு 12 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இருக்கின்றனர்.
கலாநிதி சரத்
அமுனுகம, எஸ்.பி. திஸாநாயக்க,
லக்ஷ்மன் யாப்பா
அபேவர்தன, திலங்க
சுமதிபால, விஜித்
விஜயமுனி சொய்சா,
அங்கஜன் இராமநாதன்,
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பைசர்
முஸ்தபா, ஏ.எச்.எம்.
பௌசி, மலித்
ஜயதிலக்க, மகிந்த
சமரசிங்க, டிலான்
பெரேரா ஆகியோரே
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
தேசியப் பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.
0 comments:
Post a Comment