இன ஒற்றுமை, சமாதானத்தை சீர்குலைக்க
எவரையும் அனுமதிக்கமுடியாது

ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மறுபரீலினை
செய்ய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது

-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு


நாட்டில் மீண்டும் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

30 வருட கொடூர யுத்தத்திற்குப் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை மற்றும் சமா தானத்தை சீர்குலைக்க இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள  பிரதமர், இனங்களுக்கிடை யிலான சமாதானத்தை குழப்ப முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, இன வன்முறைகளை தூண்டும் சதித் திட்டங்கள் இடம்பெற்றுவருவதாக சந்தேகம்  எழுந்துள்ளதாகவும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோக ங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டியசிங்கள மக்களின் பாதுகாவலன் என தன்னை அழை த்துக்கொண்ட டான் பிரயசாத் என்ற நபரை, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சிலரே தூண்டி விட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளதாகவும்  பிரதமர் தெரிவித்தார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனியும் நாட்டில் இடமளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரி வித்த  பிரதமர், நாட்டில் தற்போது நிலவும் சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடு பட அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை சில ஊடகங்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டிய பிரதமர், மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்காக சில ஊடகங்கள் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சுட்டி க்காட்டினார்.

இதனால் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் மறுபரீலினை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ள தாகவும்  பிரதமர் தெரிவித்தார்.

அதேவேளை 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமக்குரிய அதிகாரங்கள் சிலவற்றை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ள போதிலும், நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிண க்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்பும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு ள்ளதாக பிரதமர் ரணில் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பின்னர், அனைவர் மத்தியிலும்  இலங்கை பிரஜைகள் என்ற உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பையும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெறும் போதே நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் கொண்டாடிய நிலைமாறி, இலங்கை பிரஜைகள் என்ற அடையாளத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு செயற்படக்கூடிய நிலமையை உருவாக்குவே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கம் என்றும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top