பாடசாலை வாகனம் மரத்தில் மோதிய விபத்தில்
6 குழந்தைகள் பலி

Bus driver charged in deadly Tennessee school bus crash that killed 6

அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள டென்னஸீ மாநிலத்தில் பாடசாலை வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தன.
அமெரிக்காவின் டென்னஸீ மாநிலத்தில் உள்ள சட்டானூகா நகரில் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் சுமார் 35 குழந்தைகளுடன் வந்த பாடசாலை வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தின்மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் அந்த வாகனம் மரத்தின்மீது கவிழ்ந்தது. இவ்விபத்து பற்றி தகவல் அறிந்து, விரைந்துவந்த மீட்புக் குழுவினர், வாகனத்தின் உள்ளே உடல் சிதைந்த நிலையில் இருந்த ஐந்து குழந்தைகளின் பிரேதங்களை வெளியே எடுத்தனர்.

காயமடைந்த 20-க்கும் அதிகமான குழந்தைகள் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருகுழந்தை சிகிச்சை பலனின்றி பலியானதால் இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

மிதமிஞ்சிய வேகமே இந்த விபத்துக்கு காரணம் என கருதும் உள்ளூர் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை வாகனத்தின் டிரைவரை கைதுசெய்து, வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


இறந்த குழந்தைகள் அனைவரும் ஐந்து முதல் பத்து வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் இச்சம்பவம் சட்டானூகா நகரவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top