திடீர் நிலச்சரிவால்
சுரங்கத்துக்குள் சிக்கி 3 பேர் பலி
புதையுண்டிருக்கும் 13 தொழிலாளர்களை
மீட்கும் நடவடிக்கை மும்முரம்
Thirteen workers trapped,
3 dead, in Turkish copper mine after landslide
துருக்கி
நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் செப்பு சுரங்கத்துக்குள் சிக்கி 3 தொழிலாளர்கள்
உயிரிழந்துள்ளனர். சுரங்கத்துக்குள் புதையுண்டிருக்கும் 13 தொழிலாளர்களை
மீட்பதற்கான தேடும் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.
துருக்கி
நாட்டின் சிர்ட்
மாகாணத்திற்குட்பட்ட சிர்வான் மாவட்டத்தில்
தனியாருக்கு சொந்தமான செப்பு (copper) சுரங்கம் ஒன்றுள்ளது.
இன்று, வழக்கம்போல்
இந்த சுரங்கத்தில்
செப்பு பாளங்களை
தோண்டி எடுக்கும்
பணி நடைபெற்று
வந்தபோது, மேல்பகுதியில்
ஏற்பட்ட நிலச்சரிவால்
சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து, மண்மேடாகிப் போனது.
இடிபாட்டில்
சிக்கி உயிரிழந்த
மூன்று பிரேதங்களை
கண்டெடுத்துள்ள மீட்புக் குழுவினர், உள்ளே சிக்கிக்
கிடக்கும் மேலும்
13 தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் நடவடிக்கையில் மும்முரமாக
ஈடுபட்டு வருவதாக
உள்ளூர் ஊடகங்கள்
செய்தி வெளியிட்டு
வருகின்றன
0 comments:
Post a Comment