நடிகர் விஜய் சொன்ன மாவோ கதையும்
குட்டி குட்டி உற்சாகமூட்டும் விஷயங்களும்



நடிகர் விஜய் மேடைகளில் அதிகம் பேசாதவர். பேசும் சில இடங்களில் சினிமாவை தாண்டி சின்ன சின்ன இன்ஸ்பிரேஷன் தாட்ஸை இருவரிகளுக்கு சுருக்கி அழகாக சொல்வது வழக்கம். அப்படி சில இடங்களில் அவர் சொன்ன குட்டி குட்டி உற்சாகமூட்டும் விஷயங்கள்...

* "நிறைய பேர் வெற்றிக்கு பின்னாடி ஆணோ, பெண்ணோ இருப்பாங்கனு கேள்வி பட்டு இருக்கேன். ஆனா, என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள் தான் இருந்திருக்கு. யாராக இருந்தாலும் அவமானங்களை சந்திக்காமல் வெற்றியை சந்திக்க முடியாது."

* "நமக்கு தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஒண்ணுமே தெரியாதுனு நினைச்சுடக்கூடாது. நமக்கு எல்லாத்தையும் கற்றுக்கொடுத்ததே மற்றவர்கள் தான். அதை மனசுல வைச்சுக்கணும்."

* "நமக்கு பின்னாடி பேசறவங்களை பத்தி என்னைக்கும் யோசிக்கவே கூடாது. அவங்களை விட, நாம ரெண்டு அடி முன்னாடி இருக்கோம்னு நினைச்சுட்டு போய்ட்டே இருக்கணும்."

* "நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் என்னை பற்றிய விமர்சனங்கள் எல்லாம் நான் பெருசாக எடுத்து இருந்தேன்னா... இன்னைக்கு உங்க முன்னாடி ஒரு விஜயாகவே இருந்திருக்க முடியாதுவிமர்சனத்தை பெட்ரோலாக எடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டேனே தவிர, அதை எரிக்கும் நெருப்பாக பார்க்கலை. நீங்களும் விமர்சனத்தை இப்படி எடுத்துக்கோங்க."
* "எப்பவுமே அடுத்தவங்க தொட்ட உயரத்தை இலக்கா வைச்சுகாதீங்க. நீங்க தொட்ட உயரத்தை அடுத்தவங்களுக்கு இலக்காக வைங்க."

* "தோல்விகளுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், வெற்றிக்கு ஆயிரம் தோல்விகள் மட்டுமே இருக்க முடியும். அதனால், முயற்சி மட்டும்தான் என்றும் நிரந்திரம்." 

* "தகுதியுள்ளவங்க ஜெயிப்பாங்க. போட்டினு ஒண்ணு இருந்தால்தான், ஆட்டம் சுவாரஸ்யமா இருக்கும். தவிர, என்னிக்கோ ஒருநாள் நானும் அப்படி புதுமுகமா வந்தவன்தான். சினிமாவுக்கு நான் வந்தப்போ, என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. மூச்சுத்திணறித் திணறித்தான் நான் நீச்சல் கத்துக்கிட்டேன்." 

* "நல்லவன் எப்படி எல்லாம் வாழணும்னு நல்ல நல்ல அனுபவத்தை கொடுத்துட்டு போறான். கெட்டவன் எப்படி எல்லாம் வாழக்கூடாது அவமானத்தை கொடுத்துட்டு போறான். நமக்கு அனுபவத்தை கொடுத்த இந்த உலகத்திற்கு அவமானத்தை கொடுத்துட்டு போகவே கூடாது."

* "மனைவி கடவுள் தந்த வரம். தாய் கடவுளுக்கு நிகரான வரம். நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம். லைப்ல இவங்களை மிஸ் பண்ணிடாதீங்க."


* "முன்னாள் அதிபர் மாவோ ரோட்டில் போய்ட்டு இருக்கும்போது, ஒரு சின்னப் பையன் தலைவர்களின் படம் எல்லாம் வைச்சு விற்றுகொண்டு இருந்ததை பார்த்தார். உற்று கவனித்தபோதுதான் தெரிந்தது, எல்லா படங்களுமே அவருடைய படங்கள் தான். ரொம்ப கர்வப்பட்டார். அந்த கர்வத்தை எல்லாம் அந்த பையன்கிட்ட காட்டிக்கொள்ளாமல், அந்த பையனை அழைத்து 'என்னதான் என் மேல பாசம் வைத்து இருந்தாலும், என் படத்தை மட்டும் வைத்து விற்பது தப்புப்பா. மற்ற தலைவர்கள் படத்தையும் சேர்த்து விற்கணும்'னு சொன்னார். அதுக்கு அந்த பையன், 'மற்ற தலைவர்கள் படம்  எப்பவோ விற்று போய்டுச்சு... இதுதான் விற்காமல் அப்படியே இருக்குனு... அதுனால நாமமும் வாழ்க்கையில கர்வம் இல்லாமல் வாழணும்"  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top