பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன்
கொலம்பியா சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது
25 உடல்கள் மீட்பு
பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன் கொலம்பியா சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. 72 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிவியாவில் இருந்து கொலம்பியாவின் மெடிலின் சர்வதேச விமான நிலையத்திற்கு, தெற்கு பிரேசிலில் உள்ள சாபேகோயின்ஸ் கால்பந்து அணி வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன் விமானம் சென்று கொண்டிருந்தது. வீரர்கள் நாளை அங்கு நடைபெற உள்ள கோபா சூடாமெரிக்கா தொடரில் பங்கேற்க இருந்தனர். இந்த விமானம் மெடிலின் நகரை நெருங்கும் நேரத்தில், மலைகள் மேல் பறந்து கொண்டிருந்த போது திடீரென விழுந்து நொறுங்கியது.
சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
விபத்திற்கு உரிய காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், எரிபொருள் தீர்ந்திருக்கலாம் அல்லது மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதேநேரத்தில், விமானத்தில் பயணித்தவர்களில் சிலர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளது என மெடிலின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment