கீழே வீழ்ந்து பற்றி எரிந்த விமானம்!!
நான்கு பேர் உயிரிழப்பு
அமெரிக்கா நெவாடா, எல்கோ பிரதேசத்தில் விமானமொன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Piper PA 31 என்ற விமானமே கீழே விழுந்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் பேச்சாளர் அலன் கெனிட்சர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை குறித்த பகுதியில், வெடித்துச் சிதறிய விமானம் பற்றி எரிந்த காணொளிகள் தற்போது வேகமாக பரவி வருகின்றது.
விமானம் கீழே விழுந்த போது தரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விமானத்தில் நான்கு பேர் உள்ளிருந்தனர் அவர்கள் உயிரிழந்திருக்கலாம்
எனவும் மத்திய விமான சேவைகள் நிர்வாகத்தின் பேச்சாளர் அலன் கெனிட்சர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், மத்திய விமான சேவைகள் நிர்வாகத்தின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.