பிடல்காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்க தங்கை மறுப்பு

அமெரிக்காவை விட்டு ஒரு போதும் கியூபாவுக்கு செல்ல மாட்டேன் என்றும் தெரிவிப்பு

பிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்க கியூபா செல்ல மாட்டேன் என அவரது தங்கை மறுத்து விட்டார்.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு உலகநாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாiக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அவரைகொடூர சர்வாதிகாரி என்ற வர்ணனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.

மரணம் அடைந்த பிடல் காஸ்ட்ரோவின் உடன் பிறந்த தங்கை ஜுனிடா காஸ்ட்ரோ Juanita Castro. இவர்பிடல் காஸ்ட்ரோவுக்கு எதிரான கொள்கைகள் உடையவர். தற்போது அவர் அமெரிக்காவின் மியாடியில் தங்கியுள்ளார். வருகிற 4ஆம் திகதி நடைபெறும் பிடல் காஸ்ட் ரோவின் இறுதி சடங்கில் பங்கேற்பீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இறுதி சடங்கில் பங்கேற்க மாட்டேன். “அமெரிக்காவை விட்டு ஒரு போதும் கியூபாவுக்கு செல்ல மாட்டேன் என உறுதி பட தெரிவிக்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.

Juanita (pictured in 1970) has been living in Miami since 1965 and said the pain of her brother's death brought old wounds to the surface

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top