தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறாராம்!

இரண்டு மாதங்களாக பேசவில்லை என்பது அம்பலம்!!


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதா,தற்போது பேசத் தொடங்கி உள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நல்ல நிலையில் உள்ளார். உபகரணங்கள் மூலம் அவர் சில நிமிடங்கள் பேசுகிறார் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப்ரெட்டி கூறியுள்ளார்.
இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா, இரண்டு மாதங்களாக பேச முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, செப்., 22ம் திகதி இரவு, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் வரவழைக்கப் பட்டனர். டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்களும், அப்பல்லோ மருத்துவமனை வந்து, சிகிச்சை அளித்தனர்.

முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, கவர்னர், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வந்து சென்றனர்; அவர்களில் யாரும் முதல்வரை சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top