பூனை இறந்ததற்கு  கால்நடை டாக்டரிடம்

ரூ.2½ கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
Pakistan Doctor Sued For Rs. 2.5 Crore Over Cat's Death


பாகிஸ்தானை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது வளர்ப்பு பூனை இறந்ததற்கு 2½ கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண் வக்கீல் சுந்தஸ்கோரின். இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.

அங்குள்ள கால்நடை டாக்டரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. நோய் மேலும் அதிகரித்தது. இதனால் பூனையை வேறு டாக்டரிடம் கொண்டு சென்றார். அதற்குள் பூனை இறந்து விட்டது. ஏற்கனவே சிகிச்சை அளித்த டாக்டர் தவறுதலாக சிகிச்சை அளித்ததால் பூனை இறந்து விட்டதாக கூறி அவர் மீது ரூ. 2½ கோடி நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top