50 லட்சம் பூக்களால்

மக்களின் மனங்களை கவரும் மலர் விமானம்
Description: http://gulfnews.com/logger/p.gif?a=1.1934025&d=/2.3803/2.3819/2.3870/2.4020

டுபாய் நாட்டில் உள்ள பிரபல பூங்காவில் வளரும் செடி, கொடிகளுடன் ஏழுவகைகளை சேர்ந்த சுமார் ஐம்பது லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள மலர் விமானம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.
டுபாயில் உள்ள பிரபல பூங்காவில் அந்நாட்டை சேர்ந்தமிராக்கில் கார்டன்நிறுவனத்துடன் இணைந்துஎமிரேட்ஸ்ஏர்பஸ் விமானத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
72.93 மீட்டர் நீளம், 10.82 மீட்டர் உயரத்துடன், 24.21 மீட்டர் உயர இறக்கையுடன் சுமார் 30 டன் இரும்பு மற்றும் பலகைகளை கொண்டு 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒருநாளைக்கு பத்து மணிநேரம் வீதம், 180 நாள் உழைப்பில் அச்சு அசலாக ஏர்பஸ் A380 விமானத்தின் அதே அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தின் மேல்பாகம் முழுவதும் கண்ணைக்கவரும் ஏழுவகைகளை கொண்ட வண்ணமயமான செடி, கொடிகள் பதிக்கப்பட்டு, அதில் பூத்துக் குலுங்கும் சுமார் 50 லட்சம் மலர்கள் கண்கொள்ளா காட்சியாக தோன்றுகிறது.
இதற்கு தேவையான பூச்செடிகள் எல்லாம்  ‘மிராக்கில் கார்டன்நிறுவனத்தின் பண்ணையில் பதியமிட்டு இந்த அலங்கார விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள  50 லட்சம் மலர்களும் ஒருசேர பூத்து குலுங்கும் வேளையில் இவற்றின் எடை சுமார் 100 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாளை (27-ம் திகதி) இந்த மலர் விமானம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் இதுதொடர்பான செய்திகளை அறிந்த டுபாய் மக்கள் இப்போதே இதன் அழகில் மனங்களை பறிகொடுக்க தொடங்கியுள்ளனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top