ஐக்கிய
அரபு இராஜியத்தில் பிறந்துள்ள
ipadஐ விட
குறைவான நிறையுடன் பிறந்த அதிசயக் குழந்தை..!
ipad ஒன்றின் நிறையை விட குறைவான நிறையுடன் குழந்தை ஒன்று ஐக்கிய அரபு
இராஜியத்தில் பிறந்துள்ளது. இந்த குழந்தையின் நிறை வெறும் 631 கிராம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
மேலும், பிரசவம் வெற்றிகரமாக நிறைவு பெற்று, குழந்தை பிறந்துள்ளதை வைத்தியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன்
கொண்டாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர் குழுவின் தலைவர் கருத்து
தெரிவிக்கையில், "இந்த அதிசய
குழந்தை 26.5 வாரங்கள்
கருவில் இருந்து பின்னர் பிரசவமானது.
தற்போது குழந்தை வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில்
இருந்து வருகின்றது. குழந்தையை பிரசவம் செய்த நேரம் தான் மிகவும் முக்கியமானது என
அவர் கூறியுள்ளார்.
பிரசவத்தின் போது தாய் மிகவும் ஆபத்தான நிலையில்
இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரசவ வலி ஏற்பட்டு வைத்தியசாலையில்
அனுமிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது.
இதேவேளை, தாயும், குழந்தையும்
தற்போது மிகவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குணமடைந்துள்ளனர். குழந்தையின் நிறை
தற்போது 2.05 கிலோவாக
அதிகரித்துள்ளது. குழந்தை மிகவும் நலமாக இருக்கின்றது என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.