இலங்கையர்கள் எவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்
அமைப்பில் இணையவில்லை!


அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான .எஸ்..எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இரகசிய பாதுகாப்பு அறிக்கைகளை அடிப்படையாக கொண்டே தான் இதனை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் .எஸ்..எஸ் அமைப்பில் இணைந்து கொண்டதாக தகவல் வெளியாகியது.
அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் இலங்கையை விட்டு சென்று வெளிநாடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 32 பேர் .எஸ்..எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அண்மையில் கூறியிருந்தார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக் கூறியது பொய்யா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, இதற்கு தான் நேரடியான பதிலை வழங்காது போனால், நாளைய தினம் பத்திரிகைகளில் ராஜபக் பொய் கூறினார் - ராஜித கூறுகிறார் என்று செய்தி வெளியாகும். இதனால், விஜயதாச ராஜபக் பொய் கூறினார் என்று நான் சொல்ல மாட்டேன்.

.எஸ்..எஸ். அமைப்பில் இலங்கையர்கள் எவரும் இணைந்து கொள்ளவில்லை என்பது மாத்திரம் கூறமுடியும்.வெளிநாடுகளில் இருந்து வந்து அடிப்படைவாத அமைப்புகளில் பிரதிநிதிகள் போதனைகளை நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டும் பொய்யானது.
பேருவளை பிரதேசத்திற்கு வந்தவர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி, அவர்கள் நாட்டுக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் அவர்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
இதனடிப்படையில், அடிப்படைவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையில் போதனைகளை நடத்துவது குறித்த எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top