கைக்குழந்தை மீது தாக்குதல்
மும்பையிலுள்ள பிளே ஸ்கூல் ஒன்றில் 10 மாத பெண் குழந்தை மீது அங்கு வேலை பார்க்கும் பெண் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது. பார்ப்போர் மனதை கலங்க வைக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
முறையான அங்கீகாரம் பெறாமலேயே 'பிளே ஸ்கூல்' என்ற மழலை பள்ளிகள் புற்றீசல் போல் நாளுக்குநாள் பெருகி வருகின்றது. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ‛டே கேர்' கவனிப்பிலும் அங்கு விட்டு செல்கின்றனர். இந்நிலையில் நவிமும்பையிலும் கார்கர் பகுதியில் செயல்பட்டு வரும் ‛பிளே ஸ்கூல்' ஒன்றில், ‛டே கேர்' பராமரிப்பில் விட்டு சென்ற 10 மாத பெண் குழந்தை ஒன்றை, அங்கு வேலை பார்க்கும் பெண் சராமாரியாக தாக்குவது, சிசிடிவி பதிவின் மூலம் தெரியவந்தள்ளது.
கடந்த 21ம் திகதி(நவ 21) பிற்பகலில் இச்சம்பவம் நடந்தள்ளது. குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்ட பெற்றோர் அன்று மாலை பொலிஸில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பிளே ஸ்கூலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த பொலிஸார் திடுக்கிட்டனர்.
அதில் அங்கு வேலை பார்த்த அப்சனா என்ற பராமரிப்பாளர், குழந்தை என்றும் பாராமல் காலால் மிதிப்பதும், தரையில் தூக்கி வீசுவதும் பதிவாகியிருந்தது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் 5 மாதத்திற்கு முன்பு அந்த ‛பிளே ஸ்கூல்' புதிதாக திறக்கப்பட்டதும், பராமரிப்பாளர் அப்சனா 1 மாதத்திற்கு முன்பு தான் அங்கு பணியில் சேர்ந்ததும் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment