டிராக்டர் வெடிகுண்டு தாக்குதல்
ஷியா யாத்ரீகர்கள் உட்பட100 பேர் பலி
Shia pilgrims among 77
people killed in IS attack in Iraq
ஈராக்கில்
ஷியா யாத்திரிகர்களின் பஸ்களை
குறிவைத்து நடத்தப்பட்ட டிராக்டர் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
தலைநகர்
பாக்தாத்தில் இருந்து தென்கிழக்கில் சுமார்
120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷோமாலி கிராமத்தில்
இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கர்பாலா
புனித தளத்திற்கு சென்று ஷியா யாத்ரீகர்கள்
பஸ்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பெற்றோல் பங்கு ஒன்றின்
அருகில் பஸ்கள் நின்று கொண்டிருந்த
போது அங்கு டிராக்டர் வெடிகுண்டு
தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த
தாக்குதலில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்
அதிகம் இருந்தனர். இது குறித்து பொலிஸ்
ஒருவர் கூறுகையில், “பெற்றோல் நிலையத்தில் சுமார்
7 பஸ்கள் வரை நின்றது”
என்று தெரிவித்துள்ளார்.
ஈராக்கின்
கர்பாலா புனித தளத்திற்கு ஆண்டு
தோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சென்று வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.