அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம்

பார்வையிட்ட பிரமுகர்கள்

கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக அன்று சவூதிஅரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் அன்றய அரசின் வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரபின் முயற்சியினால் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகள் இதுவரை அம்மக்களிடம் வழங்கப்படாமல் பற்றைக் காடுகளாகக் காட்சி தரும் நிலமையில் நேற்று அதனை நேரில் பார்வையிட கிழக்கு மாகாண சபையின் அம்பாரை மாவட்ட உறுப்பினர் .எல்.எம்.மாஹீரின் முயற்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் நேற்று  சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
நேற்று மாலை 3 மணிக்கு அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை வந்தடைந்த சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரியை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம்.நசீர். மாகாண சபை உறுப்பினர் .எல்.மாகிர். .எல்.தவம் ஆகியோர் வரவேற்று வீடுகளையும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பித்தனர்.
மழை காரணமாக சரியான முறையில் பார்வையிட முடியா விட்டாலும் குறித்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் சேதமடைந்துள்ள வீடுகளையும் திருத்திக் கொள்ள தேவையான நிதிகளை முதலமைச்சரின் ஊடாக வழங்குவதாகவும் சவூதி அரேபிய இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.
இவ்விஜயத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் மற்றும் புத்தி ஜீவிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top