திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்

16 பேர் பலி 30-க்கும் அதிகமானோர் படுகாயம்

Suicide attack kills at least 16 at Iraq wedding

ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாக்தாத்திற்கு மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்பர் மாகாணத்தில் உள்ள அம்ரியாட் அல்-பல்லூஜா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஈராக் நாட்டின் பல்வேறு இடங்களில் .எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள பகுதிகளை மீட்கும் பணியில் ஈராக் படைகள் தொடர்ச்சியாக ஈடுபட்டும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
A suicide bomber detonated an explosives-laden vehicle at a wedding gathering in a town west of the Iraqi capital on Thursday, killing at least 16 people, officials said.
The attack, which took place in Amriyat al-Fallujah, a town in Anbar province 40 kilometres (25 miles) from the capital, also left more than 30 people wounded.

 There was no immediate claim of responsibility for the attack, but the Islamic State jihadist group frequently carries out suicide bombings targeting civilians in Iraq.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top