தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி
சசிகலாவுக்கும் திடீர் உடல்நலக்குறைவாம்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 64 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், உடன் இருந்து அவரை கவனித்து வருபவர் அவரது தோழி சசிகலா.
இந்நிலையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 23-ஆம் திகதி சசிகலா அப்போலோவிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டாராம். இந்த விஷயம் அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
0 comments:
Post a Comment