குரங்கை ஏவிவிட்டு செய்யப்பட்ட சேட்டையால் கலவரம்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி 50 பேர் காயம்
Sixteen
are killed and 50 wounded as two tribes in southern Libya clash over a MONKEY
after the animal attacked a group of schoolgirls outside a shop
·
Sixteen
people were killed when two tribes came to blows in Sabha, Libya
·
50
wounded following clashes with Gaddadfa and Awlad Suleiman tribes
·
A
monkey belonging to a Gaddadfa tribsman attacked group of schoolgirls
·
Their
rival tribe retaliated and killed three people from the Gaddadfa tribe
லிபியாவில் குரங்கை ஏவி விட்டு செய்யப்பட்ட சேட்டையால் 4 நாட்களாக
தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் உள்ளது பழங்குடியினர் வசிக்கும் சபா என்ற நகர் அமைந்துள்ளது.
இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குரங்குக்கு சொந்தமான 3 பேர் சாலையில் சென்ற சிறுமிகள் மீது குரங்கை ஏவி விட்டுள்ளனர். சிறுமிகள் மீது ஏறிய குரங்கு, ஒருவரின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளது. இதனால் பீதியடைந்த சிறுமிகள் தப்பி ஓடி தனது குடும்பத்தினரிடம் புகார் அளித்துள்ளார்.
சிறுமிகளுக்கு நேர்ந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஆயுதங்களை எடுத்துச்சென்று குரங்கை ஏவிய 3 பேரையும், குரங்கையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
தங்களது இனத்தவர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உயிரிழந்தவர்களின் பகுதி மக்கள் கலவரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு இதனைக்கட்டுப்படுத்த ராணுவ பீரங்கிகளும் சம்பவ இடத்திற்கு வந்தது.
ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 50 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்கை ஏவி விட்டு செய்த சேட்டையால் 16 பேர் பலியாகியுள்ள சம்பவம் சபா நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment