8 மாதக் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய
டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா, 8 மாதமேயான தமது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவருக்கும் அவரது முதல் மனைவியான இவானாவுக்கும் பிறந்தவர் இவான்கா டிரம்ப். 35 வயதான இவான்கா டிரம்பிற்கும் அவரது கணவரான ஜரேட் குஷ்னேருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது கடைசி மகன் தியோடர், இவர் பிறந்து 8 மாதங்களே ஆன நிலையில் இவான்கா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்தியோடர் பிறந்து 8 மாதங்கள் ஆனதை என்னால் நம்ப முடியவில்லை, அவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். ஒருவரின் பிறந்த நாளை ஒருவருடத்திற்கு பின்னர் தான் கொண்டாட முடியும் என்றும் அதற்கு முன் பிறந்த நாளை கொண்டாட முடியாது என்றும் விமர்சித்துள்ளனர்.

மேலும் மற்றொரு நபர்இன்னும் 4 மாதங்களில் அவன் தனது 2-வது பிறந்த நாளை கொண்டடுவான் என்று நம்புகிறேன்எனவும் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னோருவர்நவம்பர் மாதத்தில் என் குழந்தைகள் பிறந்த தேதியில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்துவிட்டேன்என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.


இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்ஓர் குழந்தை பிறந்த அந்த வருடம் மட்டுமே அக்குழந்தையின் பெற்றோர் ஒவ்வொரு மாதமும் அதன் பிறந்தநாளை கொண்டடுவர்.’ என்று ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் அவர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top