ஜனவரி 27 இல் உள்ளூராட்சித் தேர்தல்
அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு
உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் திகதி நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக பிரதமர் தலைமையில் நேற்று அரசியல் கட்சிகளுடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜேவிபி, ஈபிடிபி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திலேயே ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் வெளியிட்ட உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா,
“அம்பேகமுவ, நுவரெலிய பிரதேச சபைகளை பிரிக்கும் யோசனை தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்தவாரம் வெளியிடப்படும்.
அதையடுத்து, ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.” என்று கூறினார்.
0 comments:
Post a Comment