33 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை,

அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்த நடவடிக்கை



ஒஸ்ரியா நிவாரண கடனுதவியின் கீழ் 33 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவும், ஒஸ்ரிய நாட்டின் ஒடெல்கா வைத்திய நிறுவனத்தின் முகாமையாளரும் பணிப்பாளருமான பீற்றர் ஹாங் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன ,
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கிடைத்துள்ளது.
ஒஸ்ரியா நிறுவனத்தன் மூலம் 95 இலட்சம் யூரோவுக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்து வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தப்பட உள்ளன. இலவச சுகாதார சேவை என்பது பெயர் பலகைகளுடன் வரையறுக்கப்படாமல் அரசாங்கம் இதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

2020ம் ஆண்டளவில் ஈ-ஹெல்த் திட்டத்தின் கீழ், 300 வைத்தியசாலைகள் கணனி மயப்படுத்தப்படும். பொதுமக்களுக்கும் ஈ-ஹெல்த் அட்டை வழங்கப்படும். இந்திய அம்புலன்ஸ் சேவைக்காக மேலும் 250 அம்பியுலன்ஸ் வாகனங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top