நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்

நாளை முதல் அறிவிக்கப்படுகிறன!



நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் நாளை முதல் வெளியிடப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் வழங்கப்படும்.
இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளன. ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே நோபல் பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும்.
இதன் அடிப்படையில் யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு  எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இப்பரிசை அறிவித்து வழங்குவர்.\
இந்தாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நாளையும், அக்டோபர் 3-ம் திகதி இயற்பியல், 4-ம் திகதி வேதியல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைக்கு விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதேவேளை,அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.
சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடியவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக இவருக்கு இந்தப் பரிசை அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன். சிரியாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பான வெள்ளை தலைக்கவசம் அமைப்பின் ராட் அல் சாலே, அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம், சூசன் என்.ஹேர்மன் ஜீன், நகச் பன்யாரே, ஜெனெட் கஹின்டோ பிந்து, டெனிஸ் முக்வேஸ் ஆகியோரின் பெயர்களையும், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் பரிந்துரைப் பட்டியலில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது.

Makkal Viruppam   

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top