இது எப்படியிருக்கிறது?
பிறந்த ஊரில் உள்ள கடலரிப்பை
இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பார்வையிட்டு
வாக்குறுதி வழங்கியுள்ள பிரதி அமைச்சர்!
நிந்தவூர் பிரதேச கடலரிப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக இன்று 1 ஆம் திகதி சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அவர்களும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வொன்றினை பெற்றுத்தருவதாக மீனவர் முன்னிலையில் வாக்குறுதி வழங்கப்பட்டதாக முகநூலில்
தகவல் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது..
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் சொந்த ஊரே நிந்தவூர்தான்.
அவரின் ஊரில் உள்ள இந்த பாரிய பிரச்சினையை
நேரடியாகச் சென்று பார்வையிட கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பிரதிநிதியாகத்
தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. இன்றுதான் நிந்தவூர் மக்களின்
இந்த பாரிய பிரச்சினையை அவரால் நேரடியாகக் காண முடிந்திருக்கிறது என்றால் இவர்களின்
சேவையின் துரிதத்தை புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா? என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
0 comments:
Post a Comment