வடக்கு-கிழக்கு இணைப்பு;
கல்முனைக் கரையோர மாவட்டம்
ஹரீஸின்ஆரவாரமும் ஹக்கீமின் மௌன விரதமும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக மாநிலமாக அமைதல் வேண்டும். மாகாண ஆளுநராக இருப்பவர் மாகாணத்தின் நிறைவேற்றுத் தத்துவத்தின் பிரயோகத்தில் தலையிடுவதற்கான தத்துவமெதனையும் கொண்டிருக்கலாகாது. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவித்திருக்கும் நிலையில்
முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணையக்கூடாது இம்மாகாணங்கள்
இப்போதுள்ளவாறே பிரிந்திருக்க வேண்டும், கல்முனைக்
கரையோர மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும் என்று தங்கள் பக்க நிலைப்பாட்டைத் தெளிவாகக்
குறிப்பிடவில்லை.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான
எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக.
இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படுமாக இருந்தால்
கல்முனைக் கரையோர மாவட்டம் அதில் உள்ளடக்கப்படாமல் இருந்தால் நான் பிரதி அமைச்சர் பதவியை
இராஜினாமாச் செய்வதோடு அச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என
ஆக்ரோஷமாகத் தெரிவித்து வருகின்றார்.
வடக்கு-கிழக்கு இணைப்பு
தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முன்மொழிவு பிரதி
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. ,வடக்கு-கிழக்கு இணைப்புக்
கோரிக்கை மீதுதான்
இன்று நாட்டின் குறிப்பாக தமிழ்,
முஸ்லிம் மக்களின் முழுக்
கவனமும் திரும்பியுள்ளது.
அரசியல்
தீர்வை நோக்கிய
பயணத்தை சிக்கலுக்குள்
தள்ளும் விவகாரமாக இந்த
வடக்கு-கிழக்கு
கோரிக்கை அமைந்துள்ளது.தமிழர்கள் கேட்கும்
ஏனைய விடயங்கள்
சரியா,பிழையா
என்று தேடிப்
பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வடக்கு-கிழக்கு இணைப்புக்
கோரிக்கை மீதே
முழு நாட்டின்
பார்வையும் பதிந்துள்ளது.
இந்தக்
கோரிக்கை இவ்வாறு
அதிகம் சர்ச்சையில்
சிக்கியுள்ளமைக்கும் அதிகம் பேசப்படுகின்றமைக்கும்
இரண்டு விடயங்களே
காரணமாக அமைந்துள்ளன. வடக்கு-கிழக்கு இணைப்பு
தனித் தமிழீழத்தை
உருவாக்கிவிடும் என்று சிங்களவர்கள் கருதுவதும் இந்த
இணைப்பு தமது
சனத் தொகை
விகிதாசாரத்தை அதாவது பிரிந்திருந்தால்
முஸ்லிகளின் விகிதாசாரம் 43 சத வீதமாக இருக்கும். இணைந்தால்
முஸ்லிம்களின் விகிதாசாரம் 17 சத வீதமாக மாறிவிடும்,
வடக்கும் கிழக்கும் இணையும்போது முஸ்லிம்கள்
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்படுகின்றார்கள். அடிமையாக்கப்படுகின்ற சந்தர்ப்பமும்
ஏற்பட்டு விடும். என்று முஸ்லிம்கள்
அஞ்சுவதுதான் அந்த இரண்டு விடயங்களுமாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக மாநிலமாக அமைதல்
வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் மொழிவுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸ் அவர்கள்
ஆக்ரோஷமாகக் கருத்துக்களை வெளியிடுவது போன்று
அக்கட்சியின் தலைமைத்துவமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பகிரங்கமாக அதிகம் குரல்
கொடுத்ததில்லை. குரல் கொடுப்பதாகவுமில்லை.கல்முனைக் கரையோர மாவட்டம்
என்பதை அவர் கணக்கில் எடுப்பதாகவே இல்லை. இதற்கான காரணத்தை கிழக்கிலுள்ள
முஸ்லிம்கள் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் அவரிடம் இருந்து
பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்
அவர்கள் தனது கட்சி சார்பாக மிகத் தெளிவாக புதிய அரசியலமைப்பு
உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
மாகாணங்கள் ஒரு மாகாண சபையாக இணைப்பதற்கான
எந்தவொரு அரசியலமைப்பு
ஏற்பாடுகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்..
இலங்கை
26 நிர்வாக மாவட்டங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும்
தென்கிழக்கு கரையை அடிப்படையாகக் கொண்ட ஒலுவில்
மாவட்டம் 26 ஆவது நிர்வாக மாவட்டமாக அங்கீகரிக்கப்பட
வேண்டும் என்றும்
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
விரும்புகின்றது என்று
தனது முன்மொழிவுகள்
கட்சியை மையப்படுத்தி மிகத் தெளிவாகக்
கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் கிழக்கின்
முஸ்லிம் தலைமைகள்
அனைத்தும் குறிப்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் உட்பட அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி
வருகின்றபோதிலும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்
ரவூப் ஹக்கீம்
மாத்திரம் இதைப்
பெரிதாக அலட்டிக்கொள்வதாக இல்லை.
வடக்கு-கிழக்கு இணைப்புத்
தொடர்பில் ஏனைய
முஸ்லிம் கட்சிகளின்
நிலைப்பாட்டை விடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
நிலைப்பாடே கிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடாகப் பார்க்கப்படும்
என்ற ஒரு
நிலையில் கட்சியின் தலைமை மெளனமாக இருப்பது
கிழக்குப்பிரதேச முஸ்லிம் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் அஷ்ரபின் ஆளுமை இருந்த இடத்தில் இருக்கும் ஹரீஸ் எல்லாவற்றிலும் தலைவர் ரவூப் ஹக்கீமை
நம்பி கோட்டை விட்டுவிட்டு கரையோர மாவட்டம் பற்றி பேச ஹக்கீமுடன் சேர்ந்து ரணிலை சந்தித்தோம், கல்முனை மாவட்டத்துக்கு பெரும் விலையை கொடுத்து மற்றவர்களை தர்மசங்கடத்துக்கு ஆக்கி அமைச்சுப்பதவியை தூக்கி எறிவேன் என்று புலம்புவது வேடிக்கையான விடயமாக தற்போது
இருந்து கொண்டிருக்கிறது
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக. இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படுமாக இருந்தால் கல்முனைக் கரையோர மாவட்டம்
அதில் உள்ளடக்கப்படாமல் இருந்தால் நான் பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதோடு
அச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என மாகாணங்கள் இணைப்பு விடயத்தைக் காட்டிலும் கல்முனைக்
கரையோர மாவட்டத்தை ஏனோ முதன்மைப்படுத்தி ஆரவாரப்படுகின்றார்.
மாவட்டக் கச்சேரி என்பது அங்கிருக்கும் அரச அதிபர் அரசாங்கத்தின்
தீமானங்களை மக்களுக்கு கொண்டு செல்வதாகும். மாகாண சபை என்பது அதற்கு மாற்றமான மக்கள்
பிரதிநிதிகளால் ஆளப்படுகின்ற ஒரு சபையாகும். தற்போதிருக்கும் அம்பாறை கச்சேரியில் கரையோரப்
பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மொழிப்பிரச்சினையும் பிரயாணக் கஸ்டங்களும்
இருக்கின்றதே தவிர ஏனையவைகள் அரசாங்கத்தின் நடைமுறைக்கு ஏற்ப வழமை போன்று நடைபெற்றுக்கொண்டுதான்
இருக்கின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக மாநிலமாக அமைதல்
வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான வழிநடத்தல்
குழுவின் இடைக்கால அறிக்கையில் முன்மொழிவாகக் குறிப்பிட்டிருக்கும் போது இந்த இணைப்பு
தமது சனத் தொகை விகிதாசாரத்தை அதாவது பிரிந்திருந்தால் முஸ்லிகளின் விகிதாசாரம் 43
சத வீதமாக இருக்கும். இணைந்தால் முஸ்லிம்களின் விகிதாசாரம் 17 சத வீதமாக மாறிவிடும்,
வடக்கும் கிழக்கும் இணையும்போது முஸ்லிம்கள்
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்படுகின்றார்கள். அடிமையாக்கப்படுகின்ற சந்தர்ப்பமும்
ஏற்பட்டு விடும். என்று முஸ்லிம்கள் அஞ்சுவது
பற்றி அறிக்கையில் தெரிவிக்காமல் அரசாங்க அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் கரையோர மாவட்டம்
தொடர்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் அதனை ஒரு கோஷமாக முன்னெடுத்து ஆரவாரம் செய்வதுதான்
மக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
- மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment