மூன்று
மாகாண சபைகளின் வாகனங்களை எடுத்துச் சென்ற
சட்டவிரோதமானது
என கபே அமைப்பு தெரிவிப்பு
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கு சொந்தமான 32இற்கும் மேற்பட்ட வாகனங்களை முன்னாள்
முதலமைச்சர்கள், அமைச்சர்கள்,
எதிர்க்கட்சித் தலைவர்கள்
மற்றும் அவர்களின் பணியாளர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக கபே அமைப்பு
தெரிவித்துள்ளது.
பதவிக்காலம் முடிந்த மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம்
ஆளுநர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலைமையில் வாகனங்களை எடுத்துச் சென்றமை
சட்டவிரோதமானது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மாகாண சபைகளுக்கு சொந்தமான பெருந்தொகையான பொருட்களை
அவர்கள் திரும்ப கையளிக்கவில்லை எனவும் அரசியல் நடவடிக்கைகளுக்காக இந்த வளங்களை
பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மாகாண சபைகள் ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட
பின்னர் அதன் வளங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பொது சொத்துக்களை
தவறாக பயன்படுத்தும் செயல் எனவும் சட்டத்திற்கு அமைய இது தண்டனை பெறக் கூடிய
குற்றம் எனவும் கபே கூறியுள்ளது.
0 comments:
Post a Comment