வடக்கும் கிழக்கும் இணைப்பு விடயம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவிப்பு!
வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களின் குறிப்பாக முஸ்லிம் புத்திஜீவிகளின் கருத்துக்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாது கொழும்பிலும் கண்டியிலும் இருந்து கொண்டு கிழக்கு மாகாணத்தைப் பிறந்தவரும் இப்பிரதேச மக்களின் எண்ணங்களையும் அபிலாஷைகளையும் அறிந்து பேசுபவருமான பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும், என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பிரதேச
மக்களின் அபிலாஷ்களை சரியாக அறிந்து கொள்ளாது கருத்து தெரிவித்துள்ளார்.
ஹரீஸ் அவருடைய பகுதி மக்களை திருப்திபடுத்த பேசியிருக்கலாம் ஆனால் உண்மையான விடயம் அதுவல்ல, தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை நாம் உதாசீனம் செய்ய முடியாது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைஅவர் புரிந்து கொள்ளவில்லை என கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் இவரின் கருத்துக்கு ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வடக்கு, கிழக்கு இணையும் போது முஸ்லிம்களுக்கு தனியான அலகு, முஸ்லிம் மாகாண சபை என ஏன் கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக வாழும் மூவின மக்களையும் பிரித்து விட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திட்டமிடுகின்றார்.
இது நடைமுறைச் சாத்தியமில்லாத கிழக்கு முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு பம்பாத்து நடவடிக்கையாகும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் இந்தக் கூற்றுக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு விவாத நிகழ்ச்சியில் “எந்தக் கொம்பன் வந்தாலும் வடக்கும் கிழக்கும் இணையாது. அதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் போராட்டம் நடத்தியே தீர்வோம். இது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இது கட்சியின் நிலைப்பாடு இல்லை இது ஹரீஸின் தனிப்பட்ட நிலைப்பாடு எனக் கூறிக்கொண்டு எவராவது வரட்டும் அதற்குப் பிறகு பார்ப்போம் என்று ஆவேசமாக தனது கருத்தை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முன் வைத்திருந்தார்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்கள் ஹரீஸ் சொல்வது அவரது தனிப்பட்ட கருத்தாகும், அவர் அவருடைய பகுதி மக்களை திருப்திபடுத்த பேசியிருக்கலாம் ஆனால் உண்மையான விடயம் அதுவல்ல, தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை நாம் உதாசீனம் செய்ய முடியாது, நமக்கொரு அலகு தந்தால் இணைப்பதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. என்று
கூறியிருப்பது மூலம் இப்பிரதேச மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அக்கட்சியின்
மூலமாக அமைச்சர் அந்தஸ்தைப் பெற்றுள்ள
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எத்திசையை நோக்கி பயணிக்கிறார் என்றும் கிழக்கு
வாழ் முஸ்லிம் மக்களால் கேள்வி எழுப்பப்படுகின்றது.
0 comments:
Post a Comment