டாக்டர்
என்.ஆரிப் அவர்களின் கேள்விகளுக்கு?
மர்ஹும்
மன்சூர் அவர்களின் மகள்
சட்டத்தரணி
மர்யம் நளிமுதீன் அவர்களின் பதில்!
கேள்விகளும் பதில்களும்
டாக்டர் நாகூர் ஆரிப்
எங்களின் அன்புக்கும் நேசத்துக்கும் உரிய உறவான கல்முனைக்குடி வாழ் சகோதர
சகோதரிகளே!
ஒரு கணம், ஒரேயொரு தடவை
சிந்தித்துப் பாருங்கள். நடுநிலையான மனதோடு யோசியுங்கள்.
சாய்ந்தமருது மக்களாகிய நாங்கள் இருபது வருடங்களுக்கு மேலாக எமக்கான தனியான
உள்ளூராட்சி சபையைக் கோரி வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
01) 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மர்ஹும் அஷ்ரப்
அவர்களும், அமைச்சர் றவுப்
ஹக்கீம் அவர்களும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் சாய்ந்தமருதுக்கு தனியாக
உள்ளூராட்சி சபை வழங்கப்பட வேண்டும் என்று பேசினார்கள்.
அப்போது நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை?
02) மாகாண சபைகள், உள்ளூராட்சி முன்னாள் அமைச்சர் கரு
ஜயசூரியவிடம் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை அமைச்சர் றவுப் ஹக்கீம்,
பிரதியமைச்சர் ஹரீஸ்
ஆகியோர் அழைத்துச் சென்றார்கள்.
அப்போது நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை?
(மர்ஹும் மன்சூர் மூலமாக தடுத்தீர்கள்)
03) பகிரங்க மேடையில் பிரதமர் றணில் விக்கிரமசிங்க,
சாய்ந்தமருதுக்கு தனியாக
சபை வழங்கப்படும் என்று சொன்ன போது, நீங்கள் ஏன் எதிர்ப்பைக் காட்டவில்லை, கிளர்ந்தெழவில்லை?
04) பகிரங்க மேடையில் வைத்து அமைச்சர் பைசர்
முஸ்தபா வாக்குறுதி வழங்கிய போது, அதற்கெதிராக
நீங்கள் ஏன் எதிர்ப்பைக் காட்டவில்லை?
05) கிழக்கு மாகாண சபையில் இதற்கு ஆதரவாக பிரேரணை
சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது, அதற்கெதிராக நீங்கள் ஏன் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பைக் காட்டவில்லை?
06) பல தடவைகள் வாக்குறுதிகளை வழங்கிய
அமைச்சர்களும், பிரதியமைச்சரும்
உங்களின் முன்னால் எத்தனை தடவைகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடம் இதற்கு
முன்னர் ஒரு தடவையேனும் கேள்வி கேட்டு எதிர்ப்பைக் காட்டவில்லையே. ஏன்?
07) நாங்கள் பல வருடங்களாக பல சந்திப்புகளை
மேற்கொண்டதை தெரிந்திருந்தும், (இரண்டு தடவைகள்
தடுப்பதற்காக முயற்சித்ததைத் தவிர) நான்காக பிரிப்பதற்கு அல்லது வேறு ஏதாவது
முன்மொழிவுகளை வைத்து எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையே. ஏன்?
08) சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு என்ன
பாதிப்பு என்று இதற்கு முன்னர் உங்களுக்கு ஏதும் தெளிவூட்டல் வழங்கப்பட்டதா?
09) கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும் என்று
இதற்கு முன்னர் ஏதாவது முன்மொழிவுகள், விண்ணப்பங்கள் உத்தியோகபூர்வமாக உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்று
நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
10) இத்தனை வருடங்கள் உங்களின் பக்கத்து சகோதரர்கள்
தனியான சபைக்கான கோரிக்கையை முன்னெடுத்து வந்திருக்கையில், இவ்வளவு காலமும் தடுத்ததைத் தவிர, மௌனமாக இருந்து விட்டு, அது நிறைவேறும் தறுவாயில் வந்து உங்களை
வீதிக்கு அழைத்து எதிர்ப்பை வெளிப்படுத்த முயற்சிப்பது ஏனென்று கேட்க மாட்டீர்களா?
11) சாய்ந்தமருது பிரிந்து செல்வதை அனுமதிக்க
மாட்டோம் என்று சொன்னவர்கள், இப்போது நான்காக
பிரிப்போம் என்று சொல்கிறார்களே. அது ஏன் என்று கேட்க மாட்டீர்களா?
12) சாய்ந்தமருதைப் பிரிப்பதில் எந்த சிக்கலும்
இல்லை. ஆகவே இப்போது அதனை வேறாக்கிவிட்டு, எஞ்சியதை ஒன்றாக வைத்திருப்பதா அல்லது மூன்றாகப் பிரிப்பதா? அப்படியாயின் எப்படி பிரிப்பது என்று தமிழ்
சகோதரர்களோடும் பேசி தீர்வு காண்போம். இப்போது இது தான் நமக்கிடையில் ஒற்றுமையைத்
தொடர்ந்தும் பேணுவதற்கு சாலவும் சிறந்தது என்பதை உங்களால் உணர முடியவில்லையா?
13) இரண்டாகப் பிரித்தாலும் நான்காகப் பிரித்தாலும்
சாய்ந்தமருதின் எல்லைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லையா?
14) நான்காக பிரிப்பதற்கு உடனடியாக தீர்வு காண
முடியாது என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?
15) நமது இரண்டு சகோதர ஊர்களுக்கும் இடையில்
இந்தளவுக்கு சர்ச்சை வருவதற்கு காரணமானவர் பிரதியமைச்சர் ஹரீஸ் என்பதை அவரின்
நாடகத்தின் அரங்கேகேற்ற உரையைக் கேட்டபின்னராவது உங்களால் உணர முடியவில்லையா?
16) இத்தனை வருடங்கள் நமது சாய்ந்தமருது சகோதரர்கள்
முயற்சிகள் செய்து கொண்டிருந்த போது, தடுப்பதற்கான முயற்சிகளை மாத்திரம் செய்த நீங்கள் ஏன் அதனை நல்ல முறையில்
தீர்ப்பற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று உங்களை இப்போது வீதிக்கு
அழைப்பவர்களைப் பார்த்து கேட்பதற்காவது உங்களின் மனங்களில் ஈரமில்லையா?
அன்பான சகோதரர்களே, நடுநிலயாக
யோசியுங்கள். திறந்த மனதோடு சிந்தியுங்கள்.
சட்டத்தரணி மர்யம் நளிமுதீன்
Nagoor Ariff விதண்டாவாத கருத்துக்களோடு ஒற்றுமையை
குலைப்பதற்காகவே laptop உம் கையுமாய்
அலைபவர்களை விட ஒற்றுமைப்படுத்த அலைபவர்கள் எவ்வளவோ மேல் ......
முதலாவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டயது....... பிரிவினைக்கு எதிரான எனது
குறிப்பு பொதுவானதே தவிர தனியே சாய்ந்தமருதுக்கு மாத்திரம் அல்ல. சுத்தி சுத்தி
சூப்பர்ர வட்டைக்குள்ள ...... என்பது போல் தான் உள்ளது உங்கள் கதை.
உள்ளூராட்சிச் சபை உள்ளூராட்சி சபை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுகிய
சிந்தனையுடன் கூவித் திரிபவர்களுக்கு தெரியுமா... ஒரு நகர் ஒரு மாவட்டத்தின்
தலைநகரனால், அந்நகர்
மட்டுமல்லாது அந்நகரய் அண்டி அதன் கீழ் வரும் மற்றய ஊர்களும் எந்தளவு வளர்ச்சி
பெரும் என்பது? அப்படிப்பட்ட ஒரு
அளப்பெரிய வளர்ச்சியை நம் பிரதேசத்திற்கு கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி J.R.Jayawardane
அவர்களின் காலத்தின் போது
என் தந்தை மன்சூர் எவ்வளவு பாடு பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கிழக்கின் கரையோர மாவட்ட தலை நகரமாக மட்டுமல்லாது, முழு கிழக்கு மாகாணத்தினதும் வர்த்தக தலை
நகரமாக கல்முனையை ஆக்க வேண்டும் என்ற என் தந்தையின் வேண்டுகோளை பரிசீலனைக்கு
எடுத்த ஜனாதிபதி Jayawardane உள்ளூராட்சி சபைகளுக்கும்
பொறுப்பாக இருந்த அப்போதைய பிரதமர் R.Premadas அவர்களிடம் என் தந்தையின் "கிழக்கின்
வர்த்தக தலைநகர் கல்முனை" என்ற கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்து அதற்குரிய
நடவடிக்கைளை எடுப்பதற்கு தேவையான பொறுப்பினை ஒப்படைத்தது உங்களுக்கு தெரியுமா?
ஒரு நகர் தலை நகராக வேண்டுமானால், நிலப் பரப்பளவு, சனத்தொகை போனற பல
விடயங்கள் அதற்கு சாதகமாக அமைய வேண்டும். அவ்விதிமுறைகளுக்கு அமைய "கிழக்கின்
வர்த்தகப் பட்டினம் கல்முனை" எனும் அந்த மாபெரும் திட்டத்தை நோக்கிய முதல்
நகர்வாகவே, கரைவாகு வடக்கு,
தெற்கு, மேற்கு என பிரிக்கப் பட்டிருந்த மூன்று கிராம
சபைகளும் ( மருதமுனை,சாய்ந்தமருது,
நற்பட்டிமுனை) கல்முனை
பட்டின சபையின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டன.
தற்போதைய அரசின் கீழ் பிரதமர் Ranil Wickramasinghe இன் தேர்தல்வாக்குறுதியின் பிரகாரம் மூவாயிரம்
மில்லியன் ரூபாய்களுக்கும் மேலான நிதி ஒதுக்கீட்டில் கல்முனை, சம்மாந்துறை தொகுதிகள் உட்பட எண்ணூறு ஏக்கர்
விசாலப் பரப்பில் ஆரம்பிக்கப்பட இருக்கும் "Greater Kalmunai" திட்டமும் அப்போதைய அந்த திட்டத்தின் மூலக்
கருவில் இருந்து தான் ஆரம்பித்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
இலங்கையின் வர்த்தக தலை நகர் கொழும்பு என ஆக்கப் பட்டபோது கிழக்கின் வர்த்தகத்
தலை நகர் கல்முனை என என் தந்தை கண்ட கனவு குற்றமா?
புலிகளின் அட்டூழியம் மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் அனைத்தயும் எதிர்
கொண்டு அவரது அக்கனவு நனவாகிக் கொண்டு வரும் வேளையில், மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் அடித்து வந்த
அலை தான் இனவாதக் கட்சியின் ஆரம்பம். " நாரே தக்பீர்" எனும் அந்த புனித
வார்த்தைக்குள் மக்கள் மடங்கிப் போனார்கள். மன்சூர் தன் மக்களுக்காக கண்டு
கொண்டிருந்த கனவுகளும் சிதைந்து போனது. இனவாத, பிரதேசவாதமற்ற மன்சூர் ஒரு துரோகியாக
சித்தரிக்கப்பட்டார்.
சரி அந்தக் கதை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, மன்சூர் மறுத்தார் மன்சூர் இணைத்தார் என்று
மன்சூரை குறை கூறும் நீங்கள், மன்சூரின் வலது
கையாக, ஆலோசகராக, செயலாளராக,அனைத்துமாக இருந்த, என்ரென்றும் என் மரியாதைக்குரிய, சாய்ந்தமருது பள்ளிவாசல் சபை தலைவர Y.L.M
Haniffa (மாஸ்டர்) அவர்களிடம்,
மன்சூர் சாய்ந்தமருக்கு
இவ்வளவு பெரிய துரோகத்தை இழைத்த போதும் ஏன் தொடர்ந்து அவருக்கு விசுவாசியான ஒரு அரசியல்
ஆலோசகராக இருந்து வந்தீர்கள் என கேட்கவில்லையா?
அல்லது தெரிந்தும், ஊரைப் பற்றி
சிந்தியாது தன் சுய நலத்துக்காக மன்சூருடன் ஒட்டிக் கொண்டு இருந்தாரா?
அப்படி என்றால் ஒரு சுயநல தலைமைக்குப் பின்னாலா இன்று நீங்கள் அனைவரும் அணி
திரண்டு போராடுகிறீர்கள்?
உங்களது இந்த போராட்டமும் கூட சுயநலமற்றது என்று மக்கள் எவ்வாறு நம்புவது?
(விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் மாவட்ட செயலக அதிபர் பழீல்
அவர்கள் எழுதிய "பதினேழு வருடங்களும் பதினேழு மாடிகளும்" என்ற
புத்தகத்தை படித்தால் புரியும் மன்சூரின் அரசியல் வாழ்கையில் ஹனிஃபா மாஸ்டர்
வகித்த இடமும் ஆதிக்கமும்).
என் மதிப்புற்குரிய ஹனிபா மாஸ்டர் என்னை மன்னிக்க வேண்டும். நியாயமற்ற
முறையில் என் தந்தை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மக்களுக்கு தெளிவாக்கும்
பொறுப்பு எனக்குண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும்,மறைந்த தலைவர்
மர்ஹூம் Ashroff அவர்கள் தான்
உங்களுக்கு பிரதேச செயலகம் பெற்று தந்தார். ஆம் அதனை மறுக்க முடியாது. அனால்
அதனைப் பெற உங்கள் பிரதிநிதிக் குழு அவருக்கு அளித்த வாக்குறுதியை உங்களால் மறுக்க
முடியுமா?
திடீர் ஞானம் வந்தது எனக்கா அல்லது உங்களுக்கா ? கல்முனை பிரதேச/நகர சபை ஆட்சியை முஸ்லீம்
காங்கிரஸ் கைப்பற்றி, பள்ளி காக்க
முதல் Harees வரை வந்து போன
போதும், வராத ஞானம்
சிராஸ் மீராசாஹிப் வந்து போனதன் பின்பு மாத்திரம் வந்ததன் மர்மம் என்ன ?
சாய்ந்தமருத்துக்கான படகுத்துறை நின்று போனது மாத்திரம் தெரிந்த உங்களுக்கு
என் தந்தை ஊர்பேதம் பாராது சாய்ந்தமருது உட்பட அணைத்து பிரதேசங்களுக்கும் அள்ளி
வழங்கிய மற்றய சேவைகள் தெரியாது போனதா?
ஊர்ப்பேதம் பார்ப்பவர் என்றால் இலங்கைக்கான குவைத் தூதுவராக இருந்த போது,
குவைத் நாடு வழங்கிய 900 கோடி ரூபாய்களை கல்முனை பள்ளிவாசல்களுக்கும்
பாடசாலைகளுக்கும் வழங்கி இருப்பார் மாறாக மர்ஹூம் Ashroff ஆரம்பித்த ஒலுவிலில் உள்ள தென் கிழக்குப்
பல்கலைக்கழகத்துக்கு கொடுத்திருக்க மாட்டார்.
தான் இவ்வுலுகை விட்டுப் பிரிவதட்கு இரண்டு மாதங்களுக்கு முன் கூட சுயமாக
சுவாசிக்க கஷ்டப்பட்ட நிலையிலும் தள்ளாடியவாறு சென்று குவைத் நாட்டு தூதுவரை
சந்தித்து அவரது இருதி வேண்டுகோளாக கேட்டது, குவைத் நாட்டினால் வாக்களித்து பின்
நிறைவேறாமல் போன பல்வேரு வசதிகளையும் கொண்ட இஸ்லாமிய ஆய்வு மற்றும் கலாச்சார
நிலையத்தை சாய்ந்தமருது ஜும்மாப் பள்ளிவாசல் வளவில்முடித்துத் தருமாறு. கண்களில்
நீர் மல்க தூதுவரே என்னிடம் கூறியது.
செய்த சேவைகளை சொல்லிக் காட்டும் ரத்தம் என் உடம்பில் ஓடவில்லை என்பதால்
இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். அனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதனை மக்களுக்கு
உணர்த்தி விட்டான் என்பதற்கு அடையாளமே என் தந்தையின் இறுதிப் பயணத்துக்கு ஊர்
பேதமற்று, மக்கள் செலுத்திய
நன்றிக்கடன். அல்ஹம்துலில்லாஹ்!
இறுதியாக, Minister Rauf Hakeem உடன் சென்ற உங்கள் பள்ளிவாசல் குழுவின் கோரிக்கையை, என் தந்தை தன்னை அரசியலுக்கு
அறிமுகப்படுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காய் சபாநாயகர் கரு ஜெயசூரிய நிராகரித்தார்
என்று பகிரங்கமாக என் தந்தை மீதும் கரு ஜயசூரிய மீதும் நீங்கள் சாற்றியுள்ள
குற்றச் சாட்டுக்கு உங்களிடம் என்ன நிரூபணம் இருக்கிறது? ஹக்கீம் சொன்னாரா, கரு ஜயசூரிய சொன்னாரா அல்லது உங்கள் குழு
சொன்னார்களா? நிரூபியுங்கள்
அல்லது இவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு இதற்கான உண்மையான விளக்கத்தை மக்கள்
முன் சமர்ப்பிக்க நான் தயார். நிரூபிக்க நீங்கள் தயாரா?
அன்பு ராத்தா! கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் அறவே சம்மந்தம் இல்லியே. இங்கு தனிப்பட்ட ஒருவரை புகழ்ந்தும் மற்றுமொருவரை இகழ்ந்தும் கூறியுள்ளீர்கள். மர்ஹூம் மன்சூர் சேர் மிகவும் கண்ணியவானவர், அவர் எல்லா ஊர்களையும் கல்முனை என்றே பார்த்தார். இப்போது அப்படி இல்லியே. மேலும் தனி பிரதேச சபை ஹனீபா மாஸ்டரின் தனிப்பட்ட சுய நல கோரிக்கை அல்ல. ஒட்டு மொத்த ஊரின் கோரிக்கை ராத்தோஉ.
ReplyDeleteநாஹுர் ஆரிப் காக்காவின் மரமண்டைக்கு விளங்காது,, துவேசத்தாலும் பொறாமையாளும் வளர்க்கப்பட்டவர்,,
ReplyDelete