நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பைத்
தடுக்க நடவடிக்கை
அழும் பிள்ளைக்கு பஞ்சு மிட்டாய் காட்டும் வேலைத்திட்டம்
என
மக்கள் தெரிவிப்பு
நிந்தவூர்
பிரதேசத்தில் அபாயகரமாக முன்னேறிவரும் கடலரிப்பைத் தடுக்க
மண் மூட்டை போடும் வேலைகள்
ஆரம்பமாகியுள்ளன. இந்த வேலைத்திட்டம் சீறிவரும் கடல் அலையினால்
ஏற்படும் அரிப்பைத் தடுத்து விடுமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மழை நீரினால் ஏற்படும் வெள்ளத்தை தற்காலிகமாகத் தடுக்கப் போடப்படுகின்ற மண் மூட்டைகளை இந்த
அகோரமான கடலரிப்புக்கு போடுவது எந்த வகையில் சாத்தியமாகும் என்றும் மக்களால்
வினவப்படுகின்றது.
அழும்
பிள்ளைக்கு பஞ்சு மிட்டாய் காட்டாமல் குழந்தையின் அழுகைக்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்க்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் மக்கள்
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நிந்தவூர்
பிரதேசத்தில் கடலரிப்பினால் தென்னை மரங்கள் குடை
சாய்ந்து கிடப்பதையும் கடலரிப்பைத் தடுக்க மண் மூட்டை போடும்
வேலை ஆரம்பமாகியுள்ளதையும் காணலாம்.
படங்கள்: முஹம்மட் ஜெலீல்,
0 comments:
Post a Comment