பிரதி அமைச்சர் தலைமையில்
மீண்டும் ஒரு குழு
மக்களை ஏமாற்ற நினைக்கும்
அரசியல்வாதிகளின் சித்து
விளையாட்டு
மக்களின் போராட்டம் தொடரும்
பள்ளிவாயல் தலைமையிலான
அமைப்புக்கள் தெரிவிப்பு
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வேண்டி இதுவரை மொத்தமாக
40 கூட்டங்கள் பல்வேறு தரப்பினருடனும் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில்
மீண்டும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழு நியமனம் என்பது சாய்ந்தமருது
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகும் எனக் கருதுகின்றோம். என சாய்ந்தமருது – மாளிகைக்ககாடு பெரிய பள்ளிவாயல் பரிபாலன சபையும் பொது அமைப்புகளும்.
சாய்ந்தமருது மக்களுக்கு பகிரங்கமாக பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானமானது சாய்ந்தமருதுக்கான தனியான
உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை மழுங்கடித்து தடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன்
அந்த தீர்மானத்தை முற்றாக நாங்கள் நிராகரிக்கின்றோம். என்றும் மக்களுக்கு தெரிவித்துள்ளது.
சாய்ந்தமருது – மாளிகைக்ககாடு பெரிய பள்ளிவாயல் பரிபாலன சபையும்
பொது அமைப்புகளும் ஒன்று கூடி எடுத்துள்ள. தீர்மானங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும்
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூரட்சி சபையை
உடனடியாகப் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்
அது வரை எமது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
24.10.2017 ஆம் திகதி இரவு சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாயல்
பரிபாலன சபையின் தலைமையில் சிவில் அமைப்புக்கள் ஊர் பிரமுகர்கள் பிரசன்னத்துடன்
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை
எதுவித தாமதுமுமின்றி உடனடியாகப் பிரகடன செய்யப்படல் வேண்டும் என ஏகமனதாகத்
தீர்மானித்துள்ளதுடன் அதுவரை சாய்ந்தமருதில் எந்தவித கட்சி அரசியல்
நடவடிக்கைகளிலும் அரசியல் கட்சிகளோ அல்லது அதன் பிரதிநிதிகளோ ஈடுபடக்கூடாது என்பதை
மிகப்பணிவன்புடன் அறியத்தருகின்றோம்.
அத்துடன் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்வரும் தீர்மானங்களை மக்களுக்கு
தெரியப்படுத்துகின்றோம்.
1.
சாய்ந்தமருது
உள்ளூராட்சை சபை விடயமாக கடந்த 24.10.2017 செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் கல்முனை மாநகர
சபையை நான்கு சபைகளாகப் பிரிப்பது
எனவும் அதற்காக பிரதி அமைச்சர்
எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் குழு ஒன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை மழுங்கடித்து தடுப்பதற்கான
செயற்பாடாக நாம் கருதுவதுடன் அந்த தீர்மானத்தை முற்றாக நாங்கள் நிராகரிக்கின்றோம்.
2.
பிரதமர்
தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கும் சாய்ந்தமருதுக்குத் தனியான
உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. என்பதை
உறுதியாக அறிவிக்கின்றோம்.
3.
இத்தீர்மானமானது
பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
ஆகியோர் சாய்ந்தமருது மக்களுக்கு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறி எடுக்கப்பட்ட
தீமானமாக நாங்கள் கருதுகின்றோம்.
4.
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளூராட்சி சபை வேண்டி இதுவரை மொத்தமாக 40 கூட்டங்கள் பல்வேறு தரப்பினருடனும்
நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில் மீண்டும் ஒரு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழு நியமனம் என்பது சாய்ந்தமருது
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகும் எனக் கருதுகின்றோம்.
5.
சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் பிரத்தியேகமான எல்லைப்பிரச்சினைகளோ, இனக்கலப்போ இல்லாமையால்
ஏற்கனவே மக்களுக்கு வாக்குறுதி அளித்தற்கு இணங்க தனியான சபையை உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகின்றோம்.
அதுவரை சாய்ந்தமருது மக்களாகிய எமது போராட்டம் தொடரும்
6.
20.10.2017 ஆம் திகதி உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் தலைமையில் அமைச்சர்களான
ரவூப் ஹக்கீம் ,றிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் சாய்ந்தமருது, கல்முனைக்குடி
ஊர் பிரமுகர்கள் பங்கு கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்கள் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் பிரதமரின் சம்மதத்துடன் வழங்கப்படல்
வேண்டும் என்றும் அதர்கான பிரதமரின் சம்மதக் கடிதத்தை இரு அமைச்சர்களும் எடுத்து தர
வேண்டும் என்ற முடிவுக்கு இத்தீர்மானன் முரனானதாகும்.
7.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை பிரகடனம் செய்யப்படாவிட்டால் அரசியல் ரீதியாக எந்தக்
கட்சியோ, அரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதுவித ஒத்துழைப்புக்களும்
வழங்கப்படாது என்பதுடன் அவர்களும் அவ்வாறான செயல்பாடுகளை சாய்ந்தமருதில் செய்யாது தவிர்ந்து
கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
8.
இதற்காக சாய்ந்தமருது பொது மக்கள் அனைவரும் தமது அரசியல் கொள்கை வேறுபாடுகளை மறந்து
எதிர்காலத்தில் எங்களால் மெற்கொள்ளப்படவிருக்கின்ற தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
9. இக்கோரிக்கையைத் தொடர்ந்தும் இழுத்தடிப்பதானது
இரண்டு ஊர்களுக்கு இடையில் தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்பதை அரசியல்வாதிகள்
உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
சாய்ந்தமருது – மாளிகைக்ககாடு பெரிய
பள்ளிவாயல் பரிபாலன சபையும் பொது அமைப்புகளும்.
0 comments:
Post a Comment