வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாமல்
தனி மாகாணங்களாக செயற்படல் வேண்டும்
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் முக நூலில் பதிவு
வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாமல் தனித் தனி மாகாணங்களாக செயற்படல் வேண்டும் என பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
"கிழக்குடன் வடக்கை இணைப்பதற்கு மு.கா. நிபந்தனையுடன் ஆதரவு" என்னும் தலைப்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தாக வெளிவந்த செய்தியானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும். பிரதி அமைச்சர் ஹரீஸ் எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு குறிப்பிட்டு உரையாற்றியிருக்கவில்லை.
பிரதி அமைச்சர் ஹரீஸ் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை, இது ஒரு திரிவுபடுத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும் என்பதை மீண்டுமொருமுறை வலியிறுத்துகின்றோம்.
மேலும் பிரதி அமைச்சரின் நிலைப்பாடான வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாமல் தனித் தனி மாகாணங்களாக செயற்படுவது என்பதை அண்மையில் அதிர்வு மற்றும் ஊடக மாநாடுகளில் வெளிப்படுத்தியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். என்றும் தனது
முக நூலில் பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment